பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2016)
நண்பர்கள் கவனத்திற்கு,
எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் பொங்கல் தினத்தன்று தொகுத்து வழங்கப்படும். எதிர்வரும் வெள்ளி கிழமைக்கு (08-01-2016) முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சொந்தமாக எழுதப்படும் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.
ஆண்டாண்டு காலம்
உழைத்து களைத்தாலும்
அவனுக்கு மிஞ்சிவது என்னவோ
கோவணம் மட்டும் தான்
ஆதவனுக்கும் உழவனுக்கும்
உள்ள பந்தம் சொல்லி மாளாது
இயற்கையோடு இணைத்தவன்
அனைத்தையும் ரசித்து உழைத்தவன் ...
உழவனின் தனிப்பட்ட தேவை
மிகவும் குறைவு ஆனால்
அவனின் அங்கலாய்ப்பு அதிகம்...
.நிறைய உழைக்க வேண்டும்
மகசூல் பெருக்க வேண்டும்
அள்ளி கொடுக்க வேண்டும்
ஆதவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் ...
ஆம் நன்றி மறவாதவன் உழவன்
தனக்காய் உதவிய அனைத்திற்கும்
நன்றி சொல்லி விழா எடுத்து மகிழ
அவன் தனக்கென்று தேர்ந்தெடுத்த தினம்
இந்த தை திருநாள் ...
அனைத்திற்கும் நன்றி சொல்லும்
அவனுக்கு யாரும் நன்றி தெரிவிப்பது
இல்லாவிடினும் குறைந்த பட்சம்
உழைக்கும் கூலி கூட கிடைபதில்லை ...
இது உழவர் தினம்
தமிழர் தினம் அல்ல
அவனை ஒரு இனத்தோடு சேர்த்து
சுருக்காதீர்கள்..பல நாடுகளில்
வெவ்வேறு பெயரில் உழவர்கள்
இந்த நாளை இதே தினத்தில் மகிழ்ச்சியோடு
கொண்டாடி வருகிறார்கள் ...
வருடம் முழுவதும் இடையில் கச்சையோடு
குனிந்தே பயிர் செய்து விவசாயம்
செய்து சாகுபடி பார்த்தவன் ஒரு நாளாவது
நல்ல துணி உடுத்தி தலை நிமிர்ந்து
கொண்டாடட்டும் இந்த திருநாளை ....
இது எனது சொந்த கவிதை எங்கும் சுட்டது இல்லை என்பதை பெருமையாக தெரிவித்து கொள்கிறேன் eeeee.....