FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on December 31, 2015, 12:14:04 PM

Title: நின் ரசிப்பின் ருசிப்பு !!
Post by: aasaiajiith on December 31, 2015, 12:14:04 PM
வியத்தகும் லயிப்புடனான
நின் ரசிப்பது எழுப்பிய
உசுப்பலுக்கெனவே...

வெறித்தவாறே இரு கண்களையும்
விரித்தவாறே
பார்த்துக்கொண்டிருந்தேன்

கருத்த மேகத்திலிருந்து
பெருத்த வரமாய் இறங்கித்
தெறித்து விழும்
மழைத்துளிகளை .

அதுனால் வரை
அதுவாகவே மட்டுமிருந்துவந்த
அம்மழைத்துளிகள் ..

அது எப்படி அது
ருசிக்கும் உன்
ரசிப்பின் உசுப்பலோடு
பார்க்கையில் மட்டும்
அழகாய் அதிஅழகாய் 


அடியே மழைக்காதலியே !!
இல்லையில்லை 
திருத்தம்

எனைப்போல் அதிகமாய்
அதிஅழுத்தமாயன்றியும்
மழையையும் காதலிப்பவளே !! 

இல்லா  பெயருக்கும் புகழுக்குமே
புவியில் பேயாய் பறக்கும்
ஆட்சியாளர்கள்  போலன்றி

எனக்கென தனித்திருக்கும்
ஒற்றை பெரும் புகழை
இழந்திட நான் இ.வாயன் அல்லவே  ...
Title: Re: நின் ரசிப்பின் ருசிப்பு !!
Post by: SweeTie on December 31, 2015, 07:33:20 PM
ரசிப்பதை லயிப்புடன் ருசிப்பதும்
ருசித்ததை  லயிப்புடன் ரசிப்பதும்
சிரத்தையில் ஊறிய  கலைஞனால்
மட்டுமே  முடியும் 
ரசிப்பையும் ருசிப்பையும்  ஒன்றே இணைத்த உங்கள் கவிதைக்கு  வாழ்த்த்துக்கள்.
Title: Re: நின் ரசிப்பின் ருசிப்பு !!
Post by: aasaiajiith on January 01, 2016, 12:52:17 PM
ஹ்ம்ம் லயித்தேன் ...
ரசித்தேன் ருசித்தேன்
உங்கள் கருத்தையும் ....

வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்கிய
வல்லகளுக்கு
நன்றி !!