FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 30, 2015, 03:30:53 PM
-
இட்லி மாவு போண்டா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fdddd.jpg&hash=c71d1fd1cadff496aefe1619a6f413a64e7111dc)
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – 2 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
கருவேப்பிலை – 10
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இல்லையெனில் பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளலாம்.
கருவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய பொருட்களை இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும். இட்லி மாவு லூசாக இருந்தால் சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். எண்ணெய் சூடானதும் மாவில் சிறிது எடுத்து எண்ணெயில் இட்டு இருபுறமும் பொறித்து எடுக்கவும்.
பொன்னிறமாகும் வரை வேக விடவும்.