FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 28, 2015, 08:20:55 PM
-
பருப்பு தோசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2014%2F11%2FDSC_0164-e1451308354508.jpg&hash=dee5b1a0377eb727b9f25d2108bcaf1df519f471)
பருப்பு தோசை என்ற பெயரை கேட்ட உடனேயே அதை ருசித்துப் பார்க்க தோன்றுகிறதா? இந்த தோசை மிகவும் சுவையான உணவு. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். அதை தயாரிக்க தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
பச்சை பருப்பு – 1 கப்,
உளுந்தம் பருப்பு- 1 கப்,
கடலை பருப்பு- 1 கப்,
இஞ்சி – சிறுதுண்டு,
கொத்தமல்லி இலை – சிறிதளவு,
பச்சை மிளகாய் -6,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* பச்சை பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை 3 மணி நேரமாவது ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அவற்றை சேர்த்து, நன்றாக அரைத்து சரியான பக்குவத்தில் மாவாக்கிக் கொள்ளவும்.
* நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி இலை, மிளகாய், உப்பு ஆகியவற்றையும் அந்த மாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, ஒரு கரண்டி மாவை கல்லில் விட்டு தோசையாக வார்க்க வேண்டும்.
* ஒருபுறம் வெந்ததும், மறுபுறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால், சூடான பருப்பு தோசை ரெடி.