FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 28, 2015, 01:42:14 PM
-
கேரளா சிக்கன் 65
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2F65.jpg&hash=440ee6a90a9745d44aecac58744d9b7081c05f22)
பரவலாக மக்கள் மத்தியில் இந்த சிக்கன் 65 குழம்பு நன்கு பிரசித்தி பெற்ற ஒரு உணவாக உள்ளது. இந்த கேரள சமையல் முறையில், வினிகர் மற்றும் எலுமிச்சை துண்டுகள் சேர்ப்பதால், இறைச்சிக்கு ஒருவித புளிப்பு சுவையினையும் மற்றும் நல்ல மணத்தினையும் தருகிறது.
உங்களுக்கு இதை செய்ய தேவையானவை:
சிக்கன் எலும்பில்லாதது, துண்டுகளாக்கியது
வெங்காய வில்லைகள்
எண்ணெய்
காடி / வினிகர்
எலுமிச்சை துண்டுகள்
மிளகாய் தூள்
எலுமிச்சை சாறு
சோள மாவு
உப்பு
இஞ்சி பூண்டு விழுது
எப்படி செய்வது:
1. அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து கொண்டு இதில் கோழியை ஊற வைக்கவும்.
2. ஒரு பெரிய கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.
3. இதில் கோழியை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
4. எலுமிச்சை சாறு அதிகமாக சேர்த்து, மேலும் இதன் கிரேவியை அதிகப்படுத்தவும்.
5. எலுமிச்சை துண்டுகள் மற்றும் வெங்காய வில்லைகள் கொண்டு அழகுபடுத்தி பரிமாறவும்.