FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 28, 2015, 10:06:53 AM
-
கோஸ் ரைஸ்
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/1503248_1522468531383950_1558491086109286282_n.jpg?oh=9049011dccc225dab52f0a12c45d77ac&oe=570E72F2&__gda__=1461292590_d2526aebb6824b34836ae3a4b167fe15)
கோஸ் - 2 கப்,
அரிசி - 1 கப்,
உப்பு - 1 1/2 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 பல்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்.
தூள்கள்...
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அரிசியில் ஒரு சொட்டு நல்லெண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். ஒரு நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய கோஸ், உப்பு, தூள்கள் அனைத்தையும் சேர்த்து 3 அல்லது 5 நிமிடங்கள் (கோஸ் வேகும் வரை) மூடி வைத்து வதக்கவும். இந்தக் கலவையை வடித்த சாதத்துடன் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி, வறுத்த வேர்க்கடலை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.