பார்வையை கூர்மையாக்கும் ஜூஸ்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-4x9ykgkzIsE%2FVn5HGqnwCTI%2FAAAAAAAAQTE%2Fh0cpFJ_OdJA%2Fs400%2F20.jpg&hash=882c1a8b75080920ebdb37e3a3e8f791d3aeea93)
உலகத்தைப் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் உதவும் கண்கள், உடலின் ஒரு முக்கிய உறுப்பு. மை தீட்டி கண்களை அழகுபடுத்தத் தெரிந்த நமக்கு, கண்களை ஆரோக்கியமாகப் பாதுகாக்கத் தெரிவது இல்லை. அதனால்தான் சிலர் சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. கண்களில் நீர் வழிதல், கண் தொற்றுக்கள், மாலைக்கண், பார்வை மங்குதல் போன்ற பல பிரச்னைகளும் உருவாகின்றன. சருமத்தைப் பாதுகாக்க தினமும் எப்படி மெனக்கெடுகிறோமோ, அதுபோல் கண் பராமரிப்பும் அவசியம்.
தேவையானவை:
கேரட் - 2, இஞ்சி - சிறு துண்டு, சாத்துக்குடி சாறு - 50 மி.லி.
செய்முறை:
கேரட், இஞ்சியைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, சிறிது நீர் விட்டு அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். இதனுடன், சாத்துக்குடி சாறு மற்றும் சுவைக்கு ஏற்ப தேன் சேர்த்துப் பருகலாம்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-uiM5fMJ87Do%2FVn5HO6MMxMI%2FAAAAAAAAQTM%2FvQk_k2nKzz8%2Fs400%2F21.jpg&hash=d67a4059cff298d13cc584961f067e2b6b0de892)
பலன்கள்
வைட்டமின் சி, ஏ, பீட்டாகரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது.
தினம் ஒரு கேரட் ஜூஸ் அருந்தினால், பார்வையைக் கூர்மையாக்குவதுடன் சருமத்தையும் பொலிவாக்கும்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்கள், தினமும் இந்த ஜூஸை அருந்த, கண் பார்வை மேலும் மங்குவது தடுக்கப்படும்.
கேரட்டுடன் இஞ்சி மற்றும் சாத்துக்குடி சேர்வதால் வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் பாதுகாக்கப்படும்.
மிட் மார்னிங் எனப்படும் 11 மணி அளவில் தினமும் இந்தச் சாற்றைப் பருகிவர, உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை மூன்று மாதங்களில் உணர முடியும்.
கல்லீரலைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகம், பித்தப்பை போன்ற உறுப்புகளும் பலப்படும்.
கண்களை ஆரோக்கியமாக்க...
நாள்தோறும் இரவில் தூங்கச் செல்லும் முன் திரிபலா டீ பருகிவந்தால், பார்வைத்திறன் மேம்படும்.
வைட்டமின் ஏ சத்து நிறைந்த பப்பாளி மற்றும் நெல்லி, ஒமேகா 3 சத்துக்கள் கொண்ட மீன், ஃபிளாக்ஸ் விதைகள், கீரை, குறிப்பாக பொன்னாங்கன்னி கண்களைப் பாதுகாக்கும்.