FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 24, 2015, 10:11:40 PM
-
வல்கனோ சிக்கன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fght.jpg&hash=f5f95467acc5a3285ff558139006e8151e9089c3)
தேவையான பொருட்கள் :
சிக்கன் ——– 1/2 கிலோ
இஞ்சி நறுக்கியது ——-1டீஸ்பூன்
பூண்டு நறுக்கியது ——1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது —–2
சோயா சாஸ் —-1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது —–1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் ——2டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ்—– 1டீஸ்பூன்
முட்டை ——-2
செய்முறை:
சிக்கனை நீளமாக கட் செய்யவும்.(finger shape)அதனை கார்ன் மாவு முட்டை மைதா மாவு உப்பு சேர்த்துபிரட்டி
எண்ணெயில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி பொடியாக்கிய இஞ்சி பொடியாக்கிய பூண்டு போடவும். நறுக்கிய பச்சை
மிளகாய் போடவும்.சோயா சாஸ் சில்லி பேஸ்ட் தக்காளி சாஸ் சில்லி ஃபிளேக்ஸ் முதலியவற்றை சேர்க்கவும்.
தண்ணீர் சிறிது சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் பொரித்த சிக்கனை போடவும்.
இன்னொரு கடாயில் 4 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கார்ன் மாவு 1/4 ஸ்பூன் போடவும். நன்றாக
கலக்கி விடவும். சிம்மரில் வைத்து 2 முட்டை வெள்ளை கருவை ஊற்றவும்.கலக்கி விட வேண்டாம் அப்படியே
ஒரு நிமிடம் வைத்திருக்கவும்.பிறகு கலந்து ஒரு நிமிடம் வைத்திருந்து சிக்கன் இருக்கும் கடாயில் ஊற்றி
சிக்கனுடன் கலக்கவும்.கொத்தமல்லி தழை தூவி பறிமாறவும்.