FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 24, 2015, 10:05:47 PM

Title: ~ டூட்டி ஃபுரூட்டி கப் கேக் ~
Post by: MysteRy on December 24, 2015, 10:05:47 PM
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2014%2F12%2Fghgg.jpg&hash=009f48964639e5cb4cd5e653cc770eba1c77ad2f)

தேவையான பொருட்கள் :

கலவை: 1 மைதா – 3/4 கப் பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன் டூட்டி ஃபுரூட்டி – 1/4 கப் உப்பு – 1 சிட்டிகை கலவை: 2 சர்க்கரை – 1/3 கப் எணணெய் – 1/8 கப் + 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன் தண்ணீர் – 1/4 கப் கலவை: 3 கெட்டியான தயிர் – 1/4 கப் வினிகர் – 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கலவை 2-இல் கொடுக்கப்பட்ட சர்க்கரை, எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு சர்க்கரை கரையும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். பின் சிறு பௌலில் 1 டீஸ்பூன் மைதாவுடன், டூட்டி ஃபுரூட்டியைப் போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, 2 முறை சலித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ளவும். பின் 1 டேபிள் ஸ்பூன் டூட்டி ஃபுரூட்டியை தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொண்டு, மீதமுள்ளதை மைதா கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் மற்றொரு பௌலில் கலவை 3-இல் கொடுக்கப்பட்ட தயிர், பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இறுதியில் கலவை 1, கலவை 2 மற்றும் கலவை 3 ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு 180 டிகிரி C-யில் மைக்ரோ ஓவனை சூடேற்ற வேண்டும். பின் பேக்கிங் ட்ரேயில் பேப்பரால் செய்யப்பட்ட கப் கேக் லைனரை வைத்து, அதற்குள் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி, அதன் மேல் தனியாக எடுத்து வைத்துள்ள டூட்டி ஃபுரூட்டியை தூவி, மைக்ரோ ஓவனில் பேக்கிங் ட்ரேயை வைத்து, 25-30 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்தால், டூட்டி ஃபுரூட்டி கப் கேக் ரெடி!!!