FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 24, 2015, 09:23:57 PM
-
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ப்ரௌனி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fprow.jpg&hash=540e8e9924acfe621803d83d98d09a5b8571354b)
தேவையான பொருட்கள்:
மைதா – 100 கிராம்
சரக்கரை, வெண்ணெய், டார்க் சாக்லேட் – தலா 100 கிராம்
கோக்கோ பவுடர் – 10 கிராம்
வால்நட் – 30 கிராம்
பேக்கிங் பவுடர் – 3 கிராம்
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். டார்க் சாக்லேட்டைத் துண்டுகளாக்கி, ஒரு சிறிய பாத்திரத்தினுள் போடுங்கள். இதை கொதிக்கும் தண்ணீரில் வைத்தால் அந்தச் சூட்டில் சாக்லேட் உருகிவரும். இதை டபுள் பாய்லிங் என்று சொல்வார்கள். சாக்லேட்டைப் பாத்திரத்தில் போட்டு நேரடியாக உருக்கினால் தீய்ந்துவிடும்.
வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து எக் பீட்டரால் நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் சலித்த மைதா, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து மிருதுவாகக் கலந்துகொள்ளுங்கள்.
மைதாவைச் சேர்த்த பிறகு எக்காரணம் கொண்டும் கலவையை வேகமாக அடிக்கக் கூடாது. பிறகு உருக்கிய டார்க் சாக்லெட், பொடியாக நறுக்கிய வால்நட் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். அவன் – ஐ 165 டிகிரி செண்டிகிரேடில் 15 நிமிடங்களுக்கு ப்ரீஹீட் செய்யுங்கள். ப்ரௌனி கலவையை வெண்ணெய் தடவிய பேக்கிங் டிரேவில் கொட்டி 165 டிகிரி செண்டிகிரேடில் 25 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுங்கள்.