FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 23, 2015, 08:08:38 PM
-
டொமேட்டோ கார்ன் புலாவ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F3.jpg&hash=67a97c2d422b4262bc1a01dc20a3db29c44b5965)
தேவையானவை:
பாசுமதி அரிசி – ஒரு கப், வேகவைத்த கார்ன் – அரை கப், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 3, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய்ப் பால் – அரை கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். அரிசியுடன் தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு அடுப்பை சிறிதாக்கி, 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
வேக வைத்த கார்னை மேலே தூவி… பரிமாறவும்.