FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on December 23, 2015, 06:05:29 PM

Title: நின் இனிமைக்கு இணை ஏது ?
Post by: aasaiajiith on December 23, 2015, 06:05:29 PM
இம்மியளவே இருக்கும் தன்
இழி இருப்பினை இருப்பதாய்
இடஞ்சுட்டி காட்டிக்கொள்ள
இறுமாப்புடன்
இங்கிடுக்கினில் எங்கோ
இனியவள் உன்னிடம் எப்போதோ
இறங்கி இரந்து இரவலாய்
இனிமையை பெற்றவன் இவன் ...

உன் இனிமையின் ஈர்ப்பு வேண்டி
அலையாடி விளையாடி தன்னிலை தாண்டி
தேடி நின் திருப்பாதங்கள் தனை தீண்டி
மீன்கடல் எனுன் பெயர் நீக்கி
தேன்கடல் ஆக்கிடும் உன் இனிமை

சிறு குண்டுமணி அளவேயான
நின் சுவாசத்தின் சுவடதன்
இனிமைக்கு இணையாகுமோ
இவன் தன் ஆக தேகத்தின்
ஒட்டுமொத்த சோக சுவையதுவும் .......
Title: Re: நின் இனிமைக்கு இணை ஏது ?
Post by: SweeTie on December 23, 2015, 11:52:06 PM
இனிமைக்கு இனிமை  சேர்க்கும் 
இந்த இனிய  கவிதை. 
வாழ்த்துக்கள்
Title: Re: நின் இனிமைக்கு இணை ஏது ?
Post by: aasaiajiith on December 24, 2015, 11:17:16 AM
இனியா வின் இனிய வாழ்த்தினை போல ....

வழி வழியாய்
வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!