FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on December 23, 2015, 06:03:58 PM
-
வாராத வரவை எண்ணி
வாய்க்கணக்கிடும் வியாபாரியை போல்
சேராத உறவை எண்ணி
வாழ்க்கைக்கணக்கிடும் முதிர் கன்னியை போல்
சாராத அறிவை எண்ணி
மனக்கணக்கிடும் மக்கு மாணவனை போல்
நேராத பிரிவை எண்ணி
நேர்ந்திட நேந்துக்கொண்டிருக்கும்
இன்பங்களை மறுதலிக்கும்
தவமின்றி நான் பெற்ற
ஓர் பெரும் வரம் நீ நீ நீ ......
-
நீங்க தவமா பெற்றவங்க ரொம்ப புண்யம் பண்ணி இருப்பாங்க போல. ,,
ரொம்ப அழகான கவிதை. வாழ்த்துக்கள்
-
வழி வழியாய்
வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!