FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 22, 2015, 06:55:55 PM

Title: ~ உருளைக்கிழங்கு பொடிமாஸ் ~
Post by: MysteRy on December 22, 2015, 06:55:55 PM
உருளைக்கிழங்கு பொடிமாஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fpodi2.jpg&hash=16cefb35e08a4fbea644d184652563f76476a1dc)

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 200 கிராம்
மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை நன்கு கழுவி மெல்லியதாகவும், சிறியதாகவும்
நறுக்கி, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
* அடி
கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், மிளகாய்த் தூள், கரம் மசாலாவைச் சேர்த்து,
அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறவும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது தண்ணீர் தெளித்து
கிளறி மூடி வைத்து வேகவிடவும்.
* அரை வேக்காடு வெந்ததும்
உப்பு சேர்த்து அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி
கிளறி விடவும்.
* அதிகம் வேக விட்டால் கிழங்கு ஒன்றோடு ஒன்று
ஒட்டிக் கொள்ளும். ஆகவே, முக்கால் பதம் வெந்ததும் இறக்கி
வைத்து, ஒரு ஐந்து நிமிடம் மூடி வைத்து பிறகு பரிமாறவும்
* சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி. குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமானது.