FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 21, 2015, 08:09:04 PM
-
ஆனியன் ஃப்ரைட் ரைஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fonionfried-rice-e1450511454691.jpg&hash=835255cdac3d76709df601ce2befbf3d20325725)
தேவையான பொருட்கள்:
பாஸீமதி அரிசி – 1 1/2 கோப்பை
வெங்காயம் சின்னது – 12
குடை மிளகாய் – 1
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
பச்சைக் கற்பூரம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயத் தாள் – 1
ஸோயா சாஸ் – 4 மேஜைக் கரண்டி
தயார் செய்யும் முறை:
1. அரிசியை உதிரி உதிரியாக இருக்குமாறு தேவையான அளவு நீர் ஊற்றி வேக வைக்கவும்
2. வெங்காயத்தைக் கழுவி, தோல் நீக்கி, வட்ட வட்டமாக அரிந்து கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கொதிக்கும் நீரை எடுத்துக் கொள்ளவும்
குடை மிளகாயைக் கீறி அதில் போடவும்
சில நிமிடத்துக்குப் பின் அதை வெளியே எடுத்து விதைகளை நீக்கிக் கொள்ளவும்
பின்னர், அதை வட்ட வட்ட வளையமாக வெட்டிக் கொள்ளவும்
தயாரிப்பு முறை :
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெயைக் காயவிடவும். காய்ந்தவுடன் வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் அதில் குட மிளகாய், பச்சைக் கற்பூரம், உப்பு
மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
இதில் வடித்து வைக்கப்பட்டிருக்கும் சாதத்தைக் கொட்டவும்
இத்துடன் சோயா ஸாஸையும் போடவும்
வெங்காயத் தாளையும் சற்றுப் பெரிதாக வெட்டிப் போடவும்
இப்படியே ஐந்து நிமிடங்கள் வரை கிளறி இறக்கி வைக்கவும்.