FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 21, 2015, 08:02:13 PM

Title: ~ உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட் ~
Post by: MysteRy on December 21, 2015, 08:02:13 PM
உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fpo.jpg&hash=bf2fda0d88d4b557fb4840cb3058602bdf692586)

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2
பெரியது
முட்டை – 3
பெரிய வெங்காயம்- 1
உப்பு – சுவைக்கு
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

* உருளைக்கிழங்கு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கிளறவும். உருளைக்கிழங்கு
பாதி வெந்ததும் வெங்காயத்தை சேர்த்து கிளறவும். பின்னர் அதில் மிளகுத்தூள் சேர்க்கவும்.
* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
* உருளைக்கிழங்கு நன்கு பொரிந்ததும் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி உருளைக்கிழங்கின் மேல் நன்றாக
பரத்தி விடவும்.
* பின் இதனை மூடி மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெந்ததும் திருப்பி போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் எடுத்து
பரிமாறவும்.
* உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட் ரெடி.