FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 20, 2015, 08:01:54 PM

Title: ~ கோதுமை மாவு – வாழைப்பழ பணியாரம் ~
Post by: MysteRy on December 20, 2015, 08:01:54 PM
கோதுமை மாவு – வாழைப்பழ பணியாரம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fnick1.jpg&hash=3811e51d1132f8de0e203465bfcfa7648a3220c4)

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – அரை கப்
வாழைப்பழம்- 2
தேங்காய் துருவல் – அரை கப்
துருவிய கருப்பட்டி அல்லது துருவிய வெல்லம் – இனிப்புக்கேற்ப
ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை :

* கோதுமை மாவை நன்றாக கரைத்து கொள்ளவும்.
* வாழைப்பழத்தை தோல் உரித்து நன்றாகப் பிசைந்து, அதில் துருவிய தேங்காய், துருவிய வெல்லம், ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கரைத்த கோதுமை மாவு கலவையில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். கலவை சற்று கெட்டியாக இருக்கும் படி கரைத்து கொள்ளவும்.
* குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு குழியிலும் அரை கரண்டி மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சுவையான கோதுமை மாவு – வாழைப்பழ பணியாரம் ரெடி.