FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 20, 2015, 07:37:35 PM
-
முட்டை குருமா
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/12376576_1520228598274610_8448248170965166666_n.jpg?oh=2315ee864f1a203a96d857ca19dce95c&oe=570A559D)
முட்டை – 6
மஞ்சள்தூள் – 1 /4 தே.க
மிளகாய்த்தூள் – 1 /2 தே.க
தனியாதூள் – 1 தே.க
நெய் – 1 தே.க
எண்ணெய் – 2 தே.க
மல்லிதழை – 4 கொத்து
பெரிய வெங்காயம் (நறுக்கியது) – 3
தக்காளி – 2
பிரியாணி இலை – 2
கல்பாசி – 3
சீரகம் – 1 /4 தே.க
கருவேப்பிலை – 10 இலைகள்
துருவிய தேங்காய் – 1 /2 கப்
முந்திரிபருப்பு – 2பொட்டுக்கடலை – 1 தே.க
தண்ணீர் – 1 /2 கப்
பட்டை – 1
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பல்
இஞ்சி – ஒரு துண்டு
சோம்பு – 1 /4 தே.க
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பச்சைமிளகாய்,பூண்டு,இஞ்சி,சோம்பு போன்றவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.தண்ணீர் சேர்த்துதேங்காய்,முந்திரிபருப்பு,பொட்டுக்கடலை போன்றவற்றை தனியாக அரைத்து கொள்ளவும்முட்டைகளை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கல்பாசி, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.சிறிது நேரம் வதங்கிய பின்பு,பட்டை கிராம்பு விழுதைச் சேர்த்து குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அனைத்து தூள்களையும், உப்பும் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும் இறுதியாக தேங்காய் விழுது ,தண்ணீர், முட்டை சேர்த்து கொதிக்க விடவும்.
மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்து மல்லிதழை தூவி பரிமாறவும்.