-
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 084
இந்த களத்தின்இந்த நிழல் படம் பொய்கை (Poigai)அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F084.jpg&hash=d1312b904af5eb222a7e7315c250f56c315b8e6b)
intro (http://friendstamilchat.org/records33/oviyam/084/01intro.mp3)
-
காடு மேடு திருத்தி வச்சு !
கழனி என்று பேரும் வச்சு!
போனமாசம் மழைய வச்சு!
ஏற பூட்டி உழுது வச்சு!
என் பொண்டாட்டி தாலி வச்சு !
கடன் வாங்கி வித விதைச்சு!
இருந்த ஈரம் கையும் முன்னே பாங்காக நடவும் வச்சு!
உரம் போட்டு துளிர்க்க வச்சு !
தண்ணி இல்லே இப்போ காஞ்சு போச்சு
நிலம் இப்போ வெடிச்சு போச்சு
நித்தம் வானம் பார்த்தே... கண்ணும் மங்கிபோச்சு !
கழனி வரை கூட்டி போன ..என் கைத்தடிக்கும் ரத்தம் போச்சு !
மேகம் மொத்தமாய் காண போச்சு !
தேகம் இப்போ சுருங்கி போச்சு !
நதியும் ஓடையும் காண போச்சு !
மொத்த நிலமும் வீடாய் போச்சு !
மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று சொல்லி
யானை கட்டி போரடித்த வரலாறும் தொலஞ்சு போச்சு !
விண் பொய்த்தால் மண் பொய்க்கும் என்று சொன்ன
வார்த்தை இப்போ நிஜமா போச்சு !
இதெல்லாம் சொல்லும் போதே
என் உயிரும் காணா போச்சு ....!
.... பொய்கை .
Poigai (http://friendstamilmp3.com/records33/oviyam/084/02poigai.mp3)
-
உழுதுண்டு வாழ்ந்த கூட்டம்
மேகம் கண்டே ஆறுதல் அடையும்
மேகத்தின் கூட்டம் ஒரு சேர கண்டால்
அவர்கள் இதயம் களிப்பில் கொண்டாடும்
காய்ந்து போன பூமி சோர்ந்து போன மனம்
மழை கழிப்பில மறந்து போகும் விரணங்கள்
இன்னும் எதனை காலங்கள் ஓடினும்
மழையே உன் வருகைக்காக காத்திருப்போம்
பாளைகளை சோலைகள் ஆக்க
இவன்
கணியன் பூங்குன்றன்
Kaniyan (https://friendstamilchat.org/records33/oviyam/084/03kaniyan.mp3)
-
நிலமாகிய தாயின்
முனகலும் அழுகையும்
பிள்ளைகளாகிய உங்களுக்கு
ஏனோ புரியவில்லை .,,,,
அவள் புத்திமதி கேட்பாரில்லை.,
ஏளனமே செய்கின்றீர் .,,,
அவள் உங்களுக்கு அன்னமிட்டாள்
உயிர்வாழ வகை செய்தாள்.,,
மாற்றான் தாய் பிள்ளையென
ஒருநாளும் நினைத்தரியாள்
இயற்கையின் கோபம் இது ..
சுயநலம் பிடித்த சந்ததியை
எழுப்பும் போராட்டம் இது .,
ஒருநாள்
சூரியன் ஒளியை நிறுத்தி கொள்ளும்
தண்ணீர் ஓடி வர தயக்கம் கொள்ளும்
ஓடையென பெருக்கெடுக்கும்
விவசாயி கண்ணீரால் ,,என்ன பயன்?
நல்ல விளைச்சல் கொடுக்க மாட்டாள்
நிலைமை சீராக்க விழையமாட்டாள்
தூசியினால் மாசுபட்டே ., இப்பொழுது
எழும்பு கூடாகி போய்விட்டாள்
அன்று வளத்தால் அலங்கரிக்கப்பட்ட நிலமகள்
இன்று வறண்டு விட்டாள்
விரிசல் விழுந்த தரிசு நிலமே இன்று அவளின் ஆடை.
சூடான உலர்காற்றில் அவள் ரகசியம் பேசுவதை மறந்த
அவளின் மனந்திருந்தா குழந்தையின் கதை…
---- ரீனா ---
Reena (https://friendstamilchat.org/records33/oviyam/084/04reena.mp3)
-
கண்களைக் குளிரவைக்கும் பச்சை வயல்வெளிகள்
காதுக்கு இதமான சுகமான கிள்ளைகளின் கொஞ்சல்கள்
கிள்ளைகளைப் பயமுறுத்த ஆங்காங்கே வெருளிகள்
காற்றிலே அசைந்தாடும் இளம்பெண் போல் நெற்கதிர்கள்
வேர்வை சிந்தி உழைக்கும் உழவர் எனும் உத்தமர்கள்
மாமனுக்கு உணவூட்ட கலசங்கள் தனை ச் சுமந்து
ஆறடிச் சேலைக்குள் மறைந்துவரும் மடந்தைகள்
காலத்தின் கோலத்தில் நாம்இழந்த சொத்துக்கள்......
வாய்கால் வெட்டி வரம்பு கட்டி நாற்று நட்டு நீர் பாய்ச்சி
ஏர் புடிச்சு உழுது அன்று நெல் விளைந்த வயல்நிலங்கள்
இன்று கேட்பாரற்று தரிசாகி பாலையாகி
வெடித்து வீணாய் போய் .கிடக்கிறதே
வருணனும் வெறுப்புற்றான் மழை பொழிய மறுத்திட்டான்
நம்மவனும் வேண்டாமென வெளிநாடு சென்றிட்டான்
அன்று நாம் மட்டும் உண்ணாது பாருக்கே உணவழித்தோம்
இன்று இறக்குமதி வரி கட்டி பிறர் சோற்றில் வாழுகிறோம்
ஏர் பிடித்து உழுத கைகள் சோர்விழந்து போனதுவே
வரம்பேறி நடந்த கால்கள் வலுவிழந்து போனதுவே
இளமை என்ற போர்வைக்குள் முதுமை குடிகொண்டதுவே
கருங்குவளை நிறம் இழந்து வெண் கடற் பஞ்சாய் மாறியதே
உடன்பிறவாக் கைத்தடியும் என் மூன்றாம் கால் ஆனதுவே
தூரத்தே கரிக்குருவி தெரியாமல் போனதுவே
கடல் அலையோசை கேட்டு பலவருஷம் போலானதுவே
இளம் குருத்து தளிர்த்து இலையாகி முதிர்ந்து
உதிர்ந்து சருகாகி காற்றடித்து செல்வதுபோல்
கால் போன போக்கிலே காலமெல்லாம் போவேனோ...
இல்லாமல் சருகாகி காற்றிலே பறந்து மறைவேனோ......
SweeTie (https://friendstamilchat.org/records33/oviyam/084/05sweetie.mp3)
-
தமிழ் தாய்க்கு வணக்கம்..
வறண்ட பூமி காத்திருப்பதோ மழைக்கு,
உழவனின் வியர்வைப் போவதோ விலைக்கு,
மானிடனின் வாழ்க்கையோ அணையக் காத்திருக்கும் விளக்கு,
அதிலோ மானிட உனக்கு ஏனடா இவ்வளவு செருக்கு,
தயங்காமல் தர்மங்கள் செய்திடு நீ பலருக்கு,
மாமனிதனாய் திகழ்வாய் நீ பிறருக்கு,
மானிடா..
வறண்டு கிடப்பது மண் மட்டும் அல்ல, மனிதனின் மனமும் !!
விழித்தெழு தமிழா !!
வீழ்வது நாமகினும் எழுவது தமிழ் இனமாகட்டும்..
வாழ்க தமிழ், வளர்க தமிழ் பண்பாடு !!
இது ஒரு தமிழச்சியின் கதறல்... ( மைனா தமிழ் பிரியை )
MyNa (https://friendstamilchat.org/records33/oviyam/084/06myna.mp3)
-
இப்படிக்கு மழை !
அளவற்ற அறிய பொக்கிஷங்களை
உள்ளடக்கிய அற்புதம் நிறைந்த
தாய்மண்ணை ..
மேன்மை உணராது, வேதி உரங்களை வீசி
தரிசாய் மாற்றியது யாரோ ?
இரக்க குணத்தோடு வானிலிருந்து இறங்கினாலும்
இன்முகம் காட்டி இருக்க செய்யாது
எங்கிருந்து புறப்பட்டயோ
அங்கேயே சென்றிடுவாய் என
வழியனுப்பியது யாரோ ?
பாராமுகம் காட்டி
பஞ்சம், பசி நீக்க வழியில்லாது
பரிதவிக்க விட்டதே என குமுறலுடன்
பழி மட்டும் என் மீது ..
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி
விதை மணிகளை பாதுகாத்து
நம்மாழ்வார் நன்மொழிக்கு இணங்க
இயற்கை விவசாயம் செய்ய விழைந்திடுங்கள்
பசுமை புரட்சிக்கு வித்திடுங்கள்.
கிறுக்கலுடன்
- பருஷ்ணி :)
ParuShiNi (http://friendstamilchat.org//records33/oviyam/084/07parushni.mp3)
-
பாத்து பாத்து பாத்திகட்டி
பக்க வரப்பு சேத்துகட்டி
காஞ்சி போன பூமியில
காத்திருந்து என்ன பண்ண
எவன் பசியோ தீத்துவெக்க
ஏர்பிடிச்சு சேர்த்துவெச்சா
எமன் பசியோ என்னமோ
எதுவுமில்ல மிச்சமிப்போ!
வருண பகவானே!
கருண காட்டுமய்யா!
குருண நெல் வெளஞ்சா!
கூழ் ஊத்துறோம் கோயில் வந்து!
வானம் பார்த்த பூமியோட
வாழ்வ தேடுறோம்
ஆடுமாடு கூட்டத்தோடு
அலஞ்சி மாலுறோம்!
கணம்பட்டு காட்ட வாங்கி
மெனக்கெட்டு மாட்ட வாங்கி
உடன்பட்டு பயிர் நட்டோம்
கடன் பட்டு உயிர் விட்டோம்!
வெளச்சல நம்பிதான் விவசாயி
கொரச்சலா இருந்தாலும்
கொடு மழைய!
காத்திருக்கும் சக்தி
Sakthi (https://friendstamilchat.org/records33/oviyam/084/08sakthi.mp3)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2Fkavithai_zpssnnjv23o.png&hash=8c778d24b313f5263be1ebae9cdd3740a4ef9115)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2Fkavithai1_zps2pcmcmkm.png&hash=0b0c9206f946e8123f95f72479949d50bd8b9e0f)
MaraN (https://friendstamilchat.org/records33/oviyam/084/09maran.mp3)
END (https://friendstamilchat.org/records33/oviyam/084/10end.mp3)