(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-1656ybG25NA%2FVnPShp76WKI%2FAAAAAAAAQIA%2Ffx9CoZCmOsc%2Fs1600%2Fa1.jpg&hash=8e3119804a182ce416839077c0c40efee88a6acc)
எல்லாமே அவசரம்! ஆற அமர, ரசித்து ருசித்து, மென்று தின்று, சுவைக்கக்கூடவா நேரம் இல்லை... அவசர அவசரமாக நாலைந்து வாய் அள்ளிப்போட்டபடி ஓடுகிறார்கள் ஒவ்வொருவரும். இன்ஸ்டன்ட், ரெடிமேட் உணவுகள்தான் வைரல் ஹிட்.
ஹோட்டல், ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும் உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள், அதன் ருசிக்கு நம்மை அடிமையாக்கி, நாளடைவில் உடல் நலத்தையும் பாதிக்கக்கூடியவை. இந்த உண்மை புரிந்திருந்தும், வேறு வழி இன்றி அங்கே செல்பவர்கள் ஏராளமானோர். ஆரோக்கிய உணவு பற்றிய விழிப்புஉணர்வு அதிகரித்து வரும் நேரத்தில், சத்தான, சுவையான உணவுகளை நம் வீட்டிலேயே சுலபமாகவும் விரைவாகவும் தயாரிக்க முடியும். எளிய உணவைக்கூட அழகானமுறையில் பரிமாறினால், எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு அவர்களைக் கவரும்படியாக பலவித வண்ணங்களில், வடிவங்களில் கொடுத்தால், உற்சாகத்துடன் சாப்பிடுவார்கள்.
சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு எப்படிச் சுவையாகச் சமைப்பது எனத் தெரியாததால் அவற்றைத் தவிர்த்திருப்போம். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை, எப்படி அன்றாட சமையலில் சுவாரஸ்யமாகப் பயன்படுத்துவது என்பதை விளக்குகிறார் ‘ஈஷா மஹாமுத்ரா’ ரெஸ்டாரன்ட்டின் செஃப் மீனா தேனப்பன். உணவுகளின் சத்துக்களைப் பற்றி விவரிக்கிறார் டயட்டீஷியன் பிரியங்கா.(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-N6tbcJytr3U%2FVnPSxXlFJeI%2FAAAAAAAAQII%2FfkxMjOxQki8%2Fs1600%2Fa2.jpg&hash=cca1058582873cd7934f54a86628f467383941be)