FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 18, 2015, 05:52:13 PM

Title: ~ உடல் முழுவதும் தேமலா? இதோ டிப்ஸ் ~
Post by: MysteRy on December 18, 2015, 05:52:13 PM
உடல் முழுவதும் தேமலா? இதோ டிப்ஸ்

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/11742996_1469594516671352_62095118646938030_n.jpg?oh=df6c760a72eda2ff1fccc8039ad52ddb&oe=56DE9087)

உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் இதோ சில மருத்துவ குறிப்புகள்,

வாயுத்தொல்லை

* வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்கயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும்.

* வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து.

* இஞ்சி, சுக்கு, கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும்.

* வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடலாம்.

தொடர் விக்கல்

* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

பித்த வெடிப்பு

* கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

தேமல்

* வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்

* கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

* வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்