FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 18, 2015, 05:47:35 PM
-
இறால் காரக் குழம்பு
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11750726_1469647629999374_1647644786628522118_n.jpg?oh=a66b32e910367af5dadf4d8d3f72fe08&oe=57144D91)
வேண்டியவை
இறால் – 20
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
பெரும்சீரகம் – ¼ தேக்கரண்டி
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
தட்டிய பூண்டு – 4
மிளகாய்த் தூள் – 1 ரீ ஸ்பூன்
மல்லித் தூள் – ½ ரிஸ்பூன்
மஞ்சள் – ¼ ரிஸ்பூன்
தேங்காய்ப்பால் – ¼ கப்
உப்பு – தேவைக்கு
புளிக்கரைசல் – தேவைக்கு
ரம்பை – 4 துண்டு
கறிவேற்பிலை – சிறிதளவு.
ஓயில் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிப்பு
இறாலை தலை வால் நீக்கி கோதுகளைக் கழற்றி, பிடுங்கிச் சுத்தம் செய்யுங்கள்.
உடம்பின் மேற்புறத்தைக் கீறி, சாப்பாட்டுக் குடலை எடுத்துவிடுங்கள். நன்கு கழுவி, நீர் வடியவிட்டு கோப்பையில் எடுங்கள்.
ஓயிலில் சோம்பு, வெந்தயம், பூண்டு வதக்கி, பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதங்க விடுங்கள்.
ரம்பை, கறிவேற்பிலை சேருங்கள்
இறால் சேர்த்து உப்புப் போட்டு கிளறி, சிறிது பொரிய விடுங்கள். மிளகாய்பொடி. மஞ்சள்பொடி, மல்லித் தூள் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வதக்குங்கள்.
புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். இறுதியாக தேங்காய்பால் ஊற்றி பரிமாறும் போலில் மாற்றி விடுங்கள்.