FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 17, 2015, 07:40:46 PM
-
கோதுமை வெஜ் கொழுக்கட்டை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2015%2FJun%2F389b6a70-f63b-48d8-bd5c-7f24526d4d05_S_secvpf.gif&hash=0369ba4989cd8a526c5d4afe6c3672648cd6a9d2)
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று
பீன்ஸ் – 5
கேரட் – ஒன்று
உருளைக்கிழங்கு- ஒன்று
கோஸ் – ஒரு கப்
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை :
• வெங்காயம், பீன்சை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கேரட், உருளைக்கிழங்கு, கோசை துருவிக் கொள்ளவும்.
• வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். (சூடாகும் வரை வறுத்தால் போதும்). வறுத்த கோதுமை மாவுடன் அரிசி மாவு மற்றும் உப்புச் சேர்க்கவும்.
• அதனுடன் கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசையவும். நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும். • வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பீன்ஸ். கேரட், கோஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
• பிறகு மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு ட்ரையாகும் வரை வதக்க வேண்டாம், லேசான சதசதப்புடன் இருக்கும் அளவிற்கு வதக்கினால் போதும்.
• பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டையாக எடுத்து, லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு கிண்ணம் போல் செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு வதக்கிய காய்கறி கலவையை வைத்து, மூடி ஓரத்தை ஒட்டவும். மீதமுள்ள மாவிலும் இதேபோல் தயார் செய்து, அவற்றை இட்லி பானையில் வைத்து 8 – 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தெடுக்கவும்.
• மாலை நேர டிபனுக்கு சுவையான கோதுமை வெஜ் கொழுக்கட்டை தயார்.
• தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தான உணவு இது.