FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 17, 2015, 07:22:28 PM

Title: ~ வெஜிடபிள் பிட்ஸா ~
Post by: MysteRy on December 17, 2015, 07:22:28 PM
வெஜிடபிள் பிட்ஸா

என்னது நான் பிட்ஸா எழுதுகிறேனே என்று யோசிக்கிறீர்களா?
கட்டாயம் யோசிப்பீர்கள். 10, 12 வருஷங்களாக செய்வதைப்
பார்த்து, கூடமாட எல்லாம் செய்தும் பழக்கந்தான். ஆனால்
இங்கே பிட்ஸாவெல்லாம் செய்வதில்லை. ஜெனிவா ஸுமனுக்கு
ஃபோன் செய்யும்போது பிட்ஸா பண்ணும் போது எல்லாத்தையும்
படமெடுத்து அனுப்பு. வாராவாரம் சனிக்கிழமை பிட்ஸாதினம்
ஆயிற்றே என்றேன்.
வந்து சேர்ந்து 4வாரம் ஆகிறது. நீங்களும் செய்து பாருங்கள்.
வெஜிடேரியன் பிட்ஸா
வேண்டியவைகள்.
பிட்ஸாவின் அடிபாகம் தயாரிப்பதற்கு
ஈஸ்ட்—-7 கிராம்…காய்ந்த பொடி
சர்க்கரை—-1 டீஸ்பூன்
கைபொருக்கும் அளவுள்ள சுடு தண்ணீர்—250 மிலிகிராம்
மைதா—-350 கிராம் அல்லது
கோதுமைமாவு—200கிராம் இதனுடன்
மைதா—-150 கிராம் ஆக கலக்கவும்.
உப்பு —1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில்—–3 டேபிள்ஸ்பூன்.
பிசைந்த மாவு
மேலே நிரப்புவதற்கு வேண்டிய ஸாமான்கள்.
3 டேபிள்ஸ்பூன் டொமேடோ சாஸ் அல்லது டொமேடோ ப்யூரி
3 தக்காளி– ஸ்லைஸாக நறுக்கியது
3 மீடியம் சைஸ் வெங்காயம் –ஸ்லைஸாக நறுக்கியது
காப்ஸிகம் சிகப்பு,பச்சை, மஞ்சள் எது விருப்பமோ அந்த-
-வகையில் நறுக்கியது—-1 கப்
ப்ரகோலி நறுக்கியது—1 கப்
பேஸின் மேல் தடவுவதற்கு—1 டேபிள்ஸ்பூன் ஆலிவாயில்
மொஜரில்லாசீஸ்–துறுவியது—200 கிராம்
அமெரிக்கன் சோளம்–பதப்படுத்தியது. 2டேபிள்ஸ்பூன்.–டின்–
–களில் கிடைக்கும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F06%2FCapture16.jpg&hash=cfb97be34d9c1d6977bfbfe062cddf6cb62f2304)

கேப்பர்ஸ்—2 டேபிள்ஸ்பூன். புளிப்பு சுவையுடன் கூடியது.
பர்மேஸன் சீஸ்—-துருவியது—2டேபிள்ஸ்பூன்
ரிகோட்டாசீஸ்—-50 கிராம்.
செய்முறை
1 ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட்,சர்க்கரையுடன் 50 மிலிகிராம்
தண்ணீரைக் கலந்து வெப்பமான இடம் அதாவது அடுப்படியில்
15 நிமிஷங்கள் வைக்கவும். வைத்த அளவைவிட இரண்டு பங்கு
அளவு பொங்கி இருக்கும்.
2 ஒரு அகன்ற தாம்பாளத்தில் மாவுடன் உப்பைக் கலந்து பரத்தி
நடுவில் ஒரு குழிமாதிறி இடம் செய்து, ஆலிவ்ஆயில், ஈஸ்ட்-
-கலவையைச் சேர்க்கவும். மிகுதித் தண்ணீரை விட்டு, ரொட்டிக்கு
மாவு பிசைவதுபோல அழுத்தி 5,6 நிமிஷங்கள் விடாது நன்றாகவும்,
மிருதுவாகவும் மாவைப் பிசைந்து வைக்கவும்.
3 மாவின் மேல் லேசாக எண்ணெயைத் தடவி, ஒரு பாலிதீன்
பேப்பரால் கவர் செய்து ஒரு குழிவான பெறிய பாத்திரத்தில் அறை
மணிக்கதிகம் ஊறவிடவும். மாவுக்கலவை உப்பிக்கொண்டு
இரண்டு மடங்கு பெறிய சைஸைாக ஆகும். அம்மாதிறி உப்பும் வரை இருந்து
பிறகு செய்ய ஆரம்பிக்கவும்.
2 மடங்கு பெறியதாக உப்பியமாவு
4 உப்பி வந்த மாவை 2 நிமிஷங்கள் சேர்த்துப் பிசையவும். ஒரு
பட்டர் பேப்பர் மீதோ,அல்லது, குக்கி ஷீட்டின் மீதோ குழவியின்
உதவியால் ஓவல் வடிவத்திலோ,வட்ட வடிவத்திலோ பெறிய
அப்பளாமாக இடவும். இட்டதை அவன் ட்ரேயில் மாற்றவும்.
30 ஸென்டிமீட்டர் பரப்பளவிற்கு இட்டது இருக்கலாம்.
பிட்ஸாவின் அடிபாகம். குழவியால் இட்டது
எண்ணெய்தடவி ப்யூரி தடவி.துளி சீஸ் தூவி காய்கறிகள்
பரத்தப் படுகிறது
சீஸ் தூவுவதற்கு முன்
5 இட்டதின் மேல் லேசாக ஆலிவ் ஆயிலைத் தடவவும்.
அடுத்து டொமேடோ பூரியைத் தடவவும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் மொஸரில்லா சீஸைப் பரவலாகத்
தூவவும்.
வெங்காய வில்லைகளைப் பரவலாகப் பரத்தவும்.
காப்ஸிகம்,ப்ரகோலி, டொமேடோவில்லைகளைப் பரத்தவும்.
சோளமணிகள்,கேப்பர்ஸையும் பரவலாகப் போடவும்.
எல்லாவற்றிற்கும் மேல் மொஜரில்லா, பர்மேஸன்,ரிக்கோட்டா
சீஸ்களையும் பரவலாகத் தூவவும்.
பரவலாக சீஸை மேலே தூவிக்கொண்ட அலங்கார பிட்ஸா.அவனில் வைப்பதற்கு முன்.
6 அவனை முன்னதாகச் சூடாக்கவும்.
சூடான அவனில் அலங்காரம் செய்த பிட்ஸா அடங்கிய ட்ரேயை
வைத்து 240 டிகிரி ஸென்டிகிரேடில் 20 அல்லது 25 நிமிஷங்கள் வைத்து
பேக் செய்து எடுக்கவும்.
சூடான ருசியான பிட்ஸா தயார். கட் செய்து சாப்பிட வேண்டியதுதான்.
தயாராகிவிட்ட பிட்ஸா அவனில் வைத்து எடுத்தது. உண்ணும் நிலையில்
கட்டும் செய்தாயிற்று. பிட்ஸா கட்டரினால் கட் செய்யவும்.
பிட்ஸா துண்டு
டேபிளில் டபாஸ்கோ, மிளகுப்பொடி.பொடிஉப்பு.சில்லிஃப்ளேக்ஸ்,
ஒரிகானோ, மஸாலாக்கள் ஊரிய எண்ணெய், எல்லாம் இருக்கிறது.
எந்த வகை பழச்சார் வேண்டுமோ ஃப்ரிஜ்ஜில் அதுவும் இருக்கிறது
காய்கறிகளுடன் ஒரு பார்வை
தயாரிப்பில் ஒரு பார்வை. அவனில் வைப்பதற்கு முன்னர் அலங்காரம்.
பின் குறிப்பு பிட்ஸாவிற்கான டொமேடோ சாஸை வீட்டிலேயே
தயாரிக்கலாம்.
2 லவங்கம் —–பொடி செய்யவும். 4 இதழ் பூண்டைத் தட்டிக் கொள்ளவும்
பேஸில் இலை காய்ந்தது சிறிது. 2 ஸ்பூன் –ஆலிவ் ஆயில்
2 கப் அரைத்த தக்காளி விழுது.
2 டேபிள்ஸ்பூன்—டொமேடோ ப்யூரி
சிறிது, உப்பும், மிளகுப்பொடியும்
செய்முறை—–பொடித்த பேஸில், பூண்டு, லவங்கப் பொடி இவைகளைச் சேர்த்து
அரைத்த தக்காளியை ஆலிவ் ஆயிலுடன் நிதான தீயில் ஒரு பாத்திரத்தில்
கொதிக்க விடவும். வேண்டிய அளவு மிளகுப் பொடி சேர்க்கவும். திக்காக
சேர்ந்து சாஸ் பதம் வரும் போது, உப்பையும் டொமேடோ ப்யூரியையும்
சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
பிட்ஸாவிற்குண்டான சாஸ் ரெடி.
ஆற வைத்து பிட்ஸாவிற்கான சாஸாக உபயோகிக்கலாம்.
பிட்ஸா கோதுமை மாவும், மைதாவும் சேர்த்துச் செய்தால் அடிக்கடி
செய்பவர்களுக்கு நல்லது.
தனி மைதாவிலும் தயாரிக்கலாம்.
பொருமையாக முயற்சியுங்கள்.
முடியாதது எதுவுமில்லை.
எனது மருமகள் ஸுமனின் குறிப்பு இது.
பிட்ஸாவின் மேல் உப்பு,மிளகுப் பொடி, காரம்,உரிகானோ,டபாஸ்கோ
மஸாலா எண்ணெய் என வேண்டியதைத் தூவிக்கொண்டு ருசியாகச்
சாப்பிடுங்கள்.