FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 17, 2015, 07:19:17 PM
-
அழகு தரும் ஆப்பிள்!
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக அவசியமில்லைங்கிறது ஆங்கில பழமொழி. ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அழகுமொழி………..!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Frew.jpg&hash=afed0593bd4df870a1dd5b61d2064b9f624a9f97)
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.
* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.
* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகம்.