FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 17, 2015, 06:00:56 PM

Title: ~ ஓட்ஸ் தக்காளி சூப் ~
Post by: MysteRy on December 17, 2015, 06:00:56 PM
ஓட்ஸ் தக்காளி சூப்

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xlp1/v/t1.0-9/12342756_1519068041723999_1716619309101843448_n.jpg?oh=7e7b7b3b72d2ea3f008385a49402c818&oe=571DDFA4&__gda__=1457844913_7635e9224e799937bf229a209898c8d9)

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – கால் கப்
தக்காளி – 4
பூண்டு – 10 பல்
பேசில் – ஒரு சிட்டிகை
உப்பு – சுவைக்கு
குடமிளகாய் – 1 சிறியது
ஆலிவ் ஆயில் – அரை ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்

செய்முறை :

* தக்காளி, பூண்டை 2 கப் தண்ணீர் ஊற்றி மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
* குடமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்
* ஓட்சை கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும்.
* தக்காளி கலவையை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பொடித்த ஓட்சை போடவும்.
* மற்றொரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி குடமிளகாயை 1 நிமிடம் வதக்கி தக்காளி கலவையில் சேர்க்கவும்.
* அடுத்து அதில் உப்பு, மிளகுதூள், பேசில் சேர்த்து 1 நிமிடம் வைத்து இறக்கவும்.
* சுவையான சத்தான ஓட்ஸ் தக்காளி சூப் ரெடி