FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 16, 2015, 07:42:47 PM
-
பெங்காலி ஸ்வீட் புலாவ் செய்து பாருங்க…
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fpuli.jpg&hash=c0f29b0f88cbe447a3577cbeeb8f062dc15fcf41)
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 2 கப்
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
பிரியாணி இலை – 1
முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 4 கப்
செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரிசியை கழுவி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, அரிசி, மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி, தண்ணீர், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து, கொதிக்க விட வேண்டும்.
முக்கியமாக கொதிக்க வைக்கும் போது, அரிசி வேகும் வரை மூடி வைத்து, சாதமானது வெந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது சுவையான பெங்காலி ஸ்வீட் புலாவ் ரெடி!!!