FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 16, 2015, 07:32:43 PM

Title: ~ தட்டு வடை ~
Post by: MysteRy on December 16, 2015, 07:32:43 PM
தட்டு வடை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F06%2FCapture7.jpg&hash=f86d8769b7ff589d64a4a855937a9955985b64e6)

உளுத்தம் பருப்பு மாவு – 2 டேபிள் ஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
தண்ணீர் – தேவையான அளவு,
எள் – 1 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை 1 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள், உப்பு, வெண்ணெய், எள் மற்றும் ஊற வைத்துள்ள பருப்புக்களை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த மாவை நெல்லிக்காய் அளவில் உருண்டைகளாகடப் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெயை தடவி, அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து, கையாலோ அல்லது ஒரு தட்டையான பாத்திரத்தினாலோ தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ளதைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் தட்டையாக தட்டி பொரித்து எடுக்க வேண்டும்