FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 16, 2015, 06:51:52 PM
-
பிஸ்கட் சீஸ் சாட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Faqwe.jpg&hash=da30e08a896bd9c6e68c95e51310fc03dc7e33d5)
தேவையான பொருட்கள் :
உப்பு பிஸ்கட் – 1 பாக்கெட் (Monaco biscuits)
துருவிய
சீஸ்
தக்காளி
வெங்காயம்
ஸ்வீட் கார்ன்
சாட்மசாலா
தக்காளி சாஸ்
உப்பு
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்னை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
* ஒரு பிளேட்டில் பிஸ்கட்டை அடுக்கி அதன் மேல் கலந்த தக்காளி, வெங்காய கலவையை வைத்து அதன் மேல் தக்காளி சாஸ் சிறிது
ஊற்றி, மீண்டும் அதன் மேல் சாட் மசாலா தூவவும்.
* கடைசியாக அதன் மேல் துருவிய சீஸை போட்டு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* இதை செய்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். அல்லது மசாலா கலவையை மட்டும் கலந்து வைத்திருந்து பரிமாறும் போது
பிஸ்கட்டில் மேல் அனைத்தையும் போட்டு பரிமாற வேண்டும். குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் கார்ன் பிஸ்கட் சாட் மிகவும் பிடிக்கும்.