FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 16, 2015, 05:43:27 PM
-
முட்டை உசிலி
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12321163_1518991475064989_2045953220545048836_n.jpg?oh=28bf94d2853018b7ecb856c3de6bc61f&oe=56DC2CFF)
தேவையான பொருட்கள்:-
முட்டை – 4
கடலை பருப்பு – 50 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 4
தாளிக்க :
எண்ணெய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
ஒரு சிறிய துண்டு இஞ்சி
ஜீரகம்
பெருஞ்சீரகம்
பிரிஞ்சி,
பட்டை,
கிராம்பு
உப்பு
செய்முறை:-
• முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
• 1/2 மணி நேரம் கடலைப் பருப்பையும், துவரம் பருபபையும் ஊற வைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
• பிரிஞ்சி, பட்டை, கிராம்பை பொடித்து கொள்ளவும்.
• வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி முதலியவற்றைப் பொடியாக நறுக்கி இவற்றோடு, அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதைப் போட்டுக் கலந்துவைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை இட்லித் தட்டுகளில் வைத்து வேக வைத்து ஆறியபின், பொல பொலவென உதிர்த்து வைத்துக் கொள்ளவேண்டும்.
• அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரிஞ்சி, பட்டை, கிராம்பைப் பொடித்ததை போட்டு தாளித்து, 4 முட்டையின் வெள்ளைக்கருவை ஊற்றி, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
• இத்துடன், பருப்புக் கலவையைக் கலந்து பொன்னிறமக வரும் வரை, லேசாக எண்ணெய் விட்டு இளம் சூட்டில், வதக்கி இறக்க வேண்டும்.
• இதுவே முட்டை உசிலி எனப்படும் சுவையான பொரியல்.
• சைட் டிஷ்ஷாக மட்டுமின்றி மாலைச் சிற்றுண்டியாகவும் பயன்படுத்தலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.