FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Tamil NenjaN on December 15, 2015, 01:18:33 AM

Title: என் நினைவுகளில் மொத்தமாய் நீ....!!
Post by: Tamil NenjaN on December 15, 2015, 01:18:33 AM
உனக்கும் எனக்கும் எதுவும் இல்லை என்று சொல்லவா?
இல்லை நம் இருவருக்கும் மட்டும் தெரிந்த காதல் சொல்லவா?
காற்றும் கூட நம் காதல் சுமந்து சென்றதே -அன்று
நம் கண்கள் பார்த்த திசையெங்கும் மலர்கள் பூத்ததே..

வானம் பரந்த தூரம் மட்டும்
என் பார்வைக்குள் நீ பரவிக்கிடந்தாய்
இதயம் எங்கும் மொத்தமாய்
உன் நினைவுகளை உருக்கிக் கலந்திட்டாய்..
நீருக்குள் நீந்தும் மீனாய் நான்
உன் நினைவுகளில் நீந்தினேன்
அந்தி பகல் எப்பொழுதும் உன்னையே நினைத்திருந்தேன்

அர்த்தங்கள் இல்லாது கழிந்த வாழ்க்கையில்
ஒரு நந்தவனமாய் வந்தாய்
பூத்துக்குலுங்கி வசந்தம் வீச முன்னே
நடுவழியில் பிரிந்து சென்றாய்

ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்ந்திட்டாலும்
அழியாது உன் நினைவுகள்
ஆழமாய் மண்ணுக்குள் உடல் புதைந்த பின்னும்
இதயத்தில் படிந்திருக்கும் அதன் தழும்புகள்

என்னை மறந்தாய் நீ- மன்னித்தேன்
அறியேன் என்று சொன்னாய் நீ –
நொறுங்கியே போனேன் நான்
காதல் என்பது ஒரு சுகானுபவமே
வயதுக் கோளாறில் வரும் ஒரு இன்ப சாகரமே..
மறைத்திட நீ முயன்றாலும்
என்னால் மறந்திட முடியவில்லை
இறக்கும் வரை உன் நினைவுகள்
மனதை விட்டும் அகலப் போவதுமில்லை..
Title: Re: என் நினைவுகளில் மொத்தமாய் நீ....!!
Post by: SweeTie on December 15, 2015, 08:53:45 AM
உங்கள் காதல் நினைவுகளால் எங்களை  அசத்திவிட்டீர்கள்.
அழகான கவிதை.   வாழ்த்துக்கள்.  உங்கள்  கவிதை தென்றல்
தொடர்ந்து வீசட்டும்.       
Title: Re: என் நினைவுகளில் மொத்தமாய் நீ....!!
Post by: Maran on December 15, 2015, 02:07:32 PM


வாழ்த்துக்கள் நண்பா அழகான கவிதை...



உலகின் அழகான வார்த்தை
"But... I Love You"
உலகின் கொடுமையான வார்த்தை
"I Love You... But"


திரும்பித் திரும்பி
பார்த்துக் கொண்டே
செல்கிறேன் முன்னே
பிரிந்து சென்ற
நம் நினைவுகளை.....

யாரோ அழைத்த
உன் பெயர்
திரும்ப வைக்கும் என்னை.....
என் நினைவுகளில் மொத்தமாய் நீ....!!



Title: Re: என் நினைவுகளில் மொத்தமாய் நீ....!!
Post by: Tamil NenjaN on December 16, 2015, 04:14:57 AM
நன்றி  ஸ்வீட்டி... நன்றி மாறன்..உங்கள் பாராட்டுக்கள் மென்மேலும் எழுதும் ஊக்கத்தை கொடுத்துள்ளது..மிக்க நன்றி
Title: Re: என் நினைவுகளில் மொத்தமாய் நீ....!!
Post by: aasaiajiith on December 26, 2015, 02:06:58 PM
நல்ல இனிமையான   வரிகள் !!