நிழல் படம் எண் : 083
இந்த களத்தின்இந்த நிழல் படம் Enigmaஅவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F083.jpg&hash=e7d68561306f67a460b9ada76dd53648c07f2084)
ஆண்டவனின் படைப்பினில்
விசித்திரங்கள் பலப்பல
ரசிக்க பல ருசிக்க பல
நேசிக்க பல அனுபவிக்க பல
பாவப்பட்ட பிறவி சில
அதிலும் இந்த மானிட பிறவியில்
கடவுளின் அம்சம் என்று சொல்லும்
திருநங்கை நண்பிகளின்
நிலை அந்தோ பரிதாபம்
இது ஆண்டவனுக்கு மட்டுமே பொருந்தும் !!....
இவ்வுலகில் பாவ பட்டவள்
பெண் என்று நினைத்தேன்
அவளுக்காய் குரல் கொடுக்க
சினம் கொண்ட சிங்கம் மென பாரதியும்
சான்றோரும் பெரியோரும் இருந்தார்கள் ..
ஆனால் நங்கையே உன் நிலமை
ஊமை கண்ட கனவாக இந்த
சமுதாயத்தில் உந்தன் நிலை ....
எந்த மிருகமும் தன் இனத்தை
சேர்ந்தவரை ஒதுக்கி வைப்பதில்லை
தன் இனத்தை ஒதுக்கி
அவதுறு பேசி அருவருக்க
செய்யும் இந்த சமுதாயம் என்று திருந்துமோ !!....
யாரை குறை சொல்ல
பெற்று கை விட்டவனையா?
கல்வி கொடுக்க மறுத்தவனையா?
புற அழகு கண்டு மனதில் வக்கிரம் கொண்டு
கிண்டல் பேசும் சமுதாயத்தையா?
இல்லை படைத்தவனையா?
குற்றம் யார்மேல் இருப்பினும்
நட்டம் இவர்களுக்கே!!....
கவலையை துக்கி தூர ஏறி
ஒரு நாள் வாழும் ஈசலுக்கே
வாழ வழி இருக்கும் போது
உனக்கு இருக்காதா ?
ஆணை விட பலம் படைத்தவள் நீ
பெண்ணை விட ரசனை மிகுந்தவள் நீ
மனதை நேசிக்கும் மானிடர்கள்
துணை கொண்டு உன் திறமை
வெளிக்கொணர்வாய்
உங்களின் கல்கி போல
உங்களின்' இப்படிக்கு ரோஸ்' போல
இன்னும் பலரும் மின்னல் என
மிளிர காண்பாய்
அவர்களை சிறந்த முன்னுதாரணமாய் கொண்டு
உனக்கான அடையாளம் தேடு நங்கையே !!....
இவர்களின் அக அழகு சிலருக்கு புரியும்
உங்களுக்குள் நீங்களே உதவிக்கொள்ளும் பழக்கம்
பறவைகளுக்கு பிறகு உங்களிடம் காண்கிறேன்
பாசம் தேடி உங்கள் உரிமைக்காக அழுதது போதும்
பூமிக்குள் எதை புதைத்தாலும் அழிந்து விடும்
அதே பூமியில் விதையை விதைத்தால் துளிர் விடும்
இரண்டும் சாத்தியமே !!
நீ விதையாய் துளிர்த்து தளிராய் வளர்ந்து
விருச்சகமாய் செழித்து சமுதாயத்தில் ஆட்சி புரிவாய் !!....