FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on December 11, 2015, 11:37:17 PM
-
கடந்த வருடம் எழுதினேன் என் கவிஞனுகாக
கவிதை கண்ட பாரதியே - உன்
கருத்தை உண்டேன் பாரதியே.!
பாட்டாய் வாழும் பாரதியே - உனை
பாட்டில் வடிப்பேன் பாரதியே.!
புதுமை கவிதை நீ தந்தாய்.!
பெண்மை காக்க புவி வந்தாய்.!
போரிட்ட வெள்ளையனை
கூரிட்ட உன் வார்த்தை.!
துப்பாக்கி துளைக்காத
துணிவுள்ள உன் பேனா.!
கவிதையை படைத்த கடவுளே.!
கடவுளே படத்த கவிதையே.!
எப்படி பிறந்தாய் இன்று
என் எழுத்தோடு!
சக்தி தாசனே.!!
சக்தியின் வாழ்த்தை ஏற்றுக்கொள்!!
என் பேனா கையை பற்றிக்கொள்!
சக்தி
(https://c2.staticflickr.com/8/7183/6846078948_0eaae1daa0_b.jpg)
-
nice one dear :)
-
கவிதை கண்ட பாரதிக்கும் பாட்டில் வடித்த சக்திக்கும்
எனது வாழ்த்துக்கள்.