FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 07, 2015, 07:27:00 PM
-
ஆட்டு கறி குழம்பு
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/12295255_1516627618634708_2597789950037225710_n.jpg?oh=779c75dd64fec04a9077f43a3bac824f&oe=56EE9660&__gda__=1458475615_037f1621559d8b23d9af9f69b5099274)
கறி – அரைக்கிலோ
சோம்பு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – அரைத் தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பூண்டு – 6 பல்
வெங்காயம் – ஒரு கப்
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
பட்டாணி – 50 கிராம்
காரட் – ஒன்று
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கறியை நன்கு சுத்தம் செய்து கொண்டு, விரும்பியவாறு நறுக்கிக் கொள்ளவும்.
சோம்பு, மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்துக் தனியே வைத்துக் கொள்ளவும். அதே போல் இஞ்சி, பூண்டு இரண்டினையும் சேர்த்து தனியே அரைத்துக் கொள்ளவும்.
பச்சை பட்டாணி, நறுக்கின காரட் அனைத்தையும் கறியுடன் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பிறகு சோம்பு சீரக விழுது, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்போது, நறுக்கின தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின் கறி, காய்கள் அனைத்தையும் கொட்டி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரும், உப்பும் சேர்த்து நன்கு வேகவிடவும்.
குழம்பு நன்றாக கொதித்தது