- 
				
நிழல் படம் எண் : 082
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Stashஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F082.jpg&hash=f21900efb9d4f5f4c2d48be1febc948ca659ca35)
			 
			
			- 
				காலையில்.. இரட்டைப் பின்னலிட்டு, 
அவசரமாய் உணவு உண்டு, 
மிதிவண்டியை விறு விறு என வேகமாய் செலுத்தி
பள்ளிச் சாலையில் தோழியினரோடு ஒன்றாய் சேரவே..
வீட்டில் அடுக்கடுக்காய் வருத்தம் நிறைந்திருந்தாலும் 
பல காலம் தொடருமா இந்த 
முத்துச் சிரிப்பும், நட்பும்  ? தெரியாது என்றாலும் 
அக்கணத்தை ஆழமாய் ரசிக்கவே...
காலாண்டு அரையாண்டு என 
ஆண்டுகளை கூறு போட்டு 
பரீட்சை எழுதி.. முழு ஆண்டில் மாணவியர்களே 
முதல் இடம் – தேர்ச்சி சதவீகத்தில்
அதனை நினைக்கையிலே.. 
இன்னமும் பெண்கல்வி கிடைக்கப்பெறாத 
கண்மணிகளை மேற்கோளிட்டு சொல்லவே ...
பாரதியின் பெண் விடுதலைக்  கனவு மெய்ப்பட
புதுமை பெண்கள் இதோ..
தார் ரோட்டிலே தாமரை மலர்களாய் ..
   
   கிறுக்கலுடன் 
   -பருஷ்ணி :)
			 
			
			- 
				
வளைந்து செல்லும் பாதையில் 
வழிமறித்து நடை போடும் மாணவிகளை 
விலக கூற மனமில்லாமல்
மனம் அவர்கள் மேல் படிகிறது 
சிரிப்போடு புத்தகபை சுமக்கும் தோள்கள் 
வாழ்கையின் பாரம் சுமக்க 
இன்றே உனக்கு பாலபாடம் 
கற்பிகிறதோ பள்ளி?
புத்தகம் நடுவில் மயிலிறகிற்கு 
எழுதுகோல் சீவல் உணவளிப்பதை
கண்டு இன்று நகைக்கும்  உலகம் 
நாளை உன் தாய்மைக்கு தலை வணங்கும்   
தோழியின் தோல் மேல் கை போட்டு 
உவகையோடு நடக்கும் நீ 
வாழ்கையின் பாதைகளிலும்  இலகுவாய்
நடைபோட பழகிடு 
எதை சாதித்த வெற்றி களிப்பில் 
வீறுநடை கொள்கிறாய் மங்கையே?
உன் வாழ்வில் வரும் இன்னல்களையும் 
இதே சக்தியோடு கூறுபோடு 
அந்த கூட்டத்தில் ஒட்டாமல் 
தள்ளி நடக்கும் தங்கையின் உள்ளத்திலும் 
என் சிந்தனையே பிரதிபலிக்கிறதோ?
அவளின்  சிறு விழிகள் மனதின் கண்ணாடியாய்  ஆகாமல் போனதே?
			 
			
			- 
				வானில் இருக்கும் தேவதையாய் மண்ணில் பிறந்து,
தாய் தந்தை அரவணைப்பில் வளர்ந்து.
பல இன்னல்கள் நடுவே படிப்பில் சிறந்து,
கட்டாயத்தால் மனம் விருப்பம் இல்லாமல் மணந்து.
லட்சியங்களையும் கனவுகளையும் துறந்து,
மன வாழ்கையை நிருபிதாய் தாய்மை அடைந்து.
சமூகமே தாய் மண் தாய் மொழி என்று வழி மொழிந்து,
கட்டிபோட்டு அமர வைத்தது உன்னை தலை குனிந்து.
பெண்ணே உடைத்து கொண்டு வா சமையற்கட்டு என்றே சிறையிலிருந்து.
ஆன் தேசமே இனியாவது திருந்து,
ஆதரிப்பாய் பெண்கள் முன்னேற்றத்துக்கு !!! 
- தமிழ் கிறுக்கன்
			 
			
			- 
				 பைகளில் சுமப்பது புத்தகங்கள் 
மனங்களில் சுமப்பது கனவுகள் 
ஆயிரம் கனவுகள் 
பாரதி கண்ட கனவுகள் 
பரந்த அகிலத்தில் 
நிறைந்துள்ள கனவுகள் 
நியாயமான கனவுகள் இன்னும் 
நிறைவேற வேண்டிய கனவுகள் ...
பெண் சிசுக்களைப் பிரசவிப்பதே பாவம் 
பள்ளிக்கூடம் தேவையில்லை என 
ஒதுக்கி வைத்த காலம்  
வெளியே செல்லவிடாது வீட்டினுள் 
முடக்கிவைத்த காலம் 
பெண்கள் அடுக்களைக்கு மட்டுமே என 
இச்சை பொருளாய் நினைத்த காலம் 
பிள்ளைகள் பெறும் யந்திரமாய் 
நினைத்த காலம்.......
காலத்தின் வெள்ளோட்டத்தில் நீந்தி 
கரை சேர்ந்தது  பெண் ணினம் 
பெண்களுக்கும் கல்வி அவசியம் 
ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம் 
ஆணுக்கு பெண் அடிமையில்லை
பெண்களும் சாதிக்கப் பிறந்தவர்கள்   
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் 
உருவெடுத்த காலம் ….
பார் புகழ ஒரு அன்னை தெரேசா 
அண்டவெளியில் பறந்தாள் வலேன்டினா 
இலக்கங்களில் மேதையானாள்  சரோஜினி 
ஓட்டங்களில் சூரப்புலி  உஷா  
விஞ்ஞானத்தில் நோபெல் பெற்றாள்  மேரி கியூரி 
பெண்கள் இல்லாத துறைகள் இல்லை 
பெண்கள் காணாத உலகம் இல்லை....
மாணவிகளே வீறு நடைபோடுங்கள் 
வாழ்கையின் படிக்கட்டுகளை  நோக்கி 
இருட்டில் தெரியும் ஒளி விளக்கை காண 
சுமந்து செல்லுங்கள் கனவுகளை 
புத்தகங்களோடு சேர்த்து 
சிறகடித்து பறக்கும் சிட்டுக்குருவிக்கு 
உயரம் மட்டுமே இலக்கு 
கடமையுடன் செயற்படுங்கள் 
பெண்ணினத்துக்கு பெருமை சேருங்கள் .....
  
			 
			
			- 
				ஒரு காலத்தில் 
சந்தோசப்பறவைகளும் 
நட்பு பறவைகளும் 
குடியிருந்த 
நினைவுக்கூடு
கல்லூரி நட்பு
நம்மை இணைத்த பாதை
நல் மனம் நட்பு, 
இரட்டை ஜடை சாமந்தி பூ.
நாங்கள் போட்ட கும்மாளம் 
எங்கள் வாழ்க்கையின் கோலாட்டம் 
கூந்தல் விரிந்தே காற்றில் வீச 
நாம் பேசும் மணித்துளிகள் என்றென்றும் வசந்தம்.
வாழ்க்கை பயணம் மாறலாம், 
நேரம் காலம் மாறலாம்,
ஆனால் நட்பின் நினைவுகள் மட்டும் 
என்றென்றும் உயிர் வாழும். 
பிரிந்து இருந்தாலும் நட்புடனே வாழ்வோம்.
			 
			
			- 
				
இந்த சமுதாயத்தில் பல கொடுமைகள்
 நடந்தாலும் பெண்களுக்கு என்று வரும் போது 
எனக்குள் ஒரு முண்டாசு கவிஞன் 
குமைந்து கொண்டு தான் இருகின்றான் ...
சுந்தந்திரம் வந்து பல ஆண்டுகள் ஆகிறது 
ஆனால் பெண் சுதந்திரத்தை தான் 
தேடுகின்றேன் இன்று வரை 
அதை காணவில்லை ...
பெண்ணாய்  பிறந்தது முதல் 
தகப்பன் எனக்கான முடிவை 
எடுப்பான் .பின் தமையன் 
அதன் பின் எனக்காய் வந்தவன் 
அதனின் பின் நான் பெற்றவன் 
நான் தெரியாமல் கேட்கிறேன் 
துளி கூட சுய சிந்தனை இல்லாதவளா 
நான் என்று மனதுக்குள் பொறும்பும் 
பெண்களை காணும் பொழுது எல்லாம் 
எனக்குள் முண்டாசு கவிஞன்
 வெகுண்டு எழுகின்றான் ....
இரட்டை ஜடையோடு  தன் 
கனவையும் சேர்த்து பின்னி 
அவளது பாட புத்தக சுமையை 
மகளிடம்  கொடுக்கும் போது 
இது அல்ல சுமை இன்னும் இருக்கிறது 
என்று குறிப்பால் உணர்த்தி  
 என் போல் அல்லாமல் நீயாவது 
நாளும் கற்று வீறு கொண்டு விருச்சமாய் வா 
என்னும் அந்த  தாயின் மனதின் ஏக்கத்தை 
காணும் வேளையில் கோவத்தில் 
குமுறுகிறான் என் முண்டாசு கவிஞன் ....
பெண்கள் எங்கள் வீட்டின்
 காவல் தெய்வங்கள் 
நாங்கள் பாதுகாக்கிறோம் 
அவள் சிறுமி அவளுக்கு ஏதும்
 தெரியாது என்று நீங்களாக பிதற்றும் 
வார்த்தைகளை நிறுத்துங்கள் 
புலியை முறத்தால் விரட்டிய பெண்ணின் 
வழி வந்தவள் தான் நங்கள் 
பயம் காட்டி வளர்த்து எங்களை 
சுயபட்சாதபத்திர்க்கு ஆளாக்க வேண்டாம் ....
படிக்கும் பொது கவலை இன்றி படிக்காதே ,
பொறுப்பை உணர்ந்து நாளைய
 எதிர்காலத்தை மனதில் வைத்து படி .
காதல் என்ற மாய வலை பின்னி 
உன் கல்விக்கு சங்கிலி போடா வருவார்கள் 
அறுத்து எரிந்து நெஞ்சில் உரம் ஏற்று .
உன் சகோதரிக்கும் எடுத்து சொல் .
நாம் விண்வெளி பாதையில் அடி எடுத்து வைத்தாயிற்று ..
அடுத்து என்ன நம் இலக்கு .
அதை நோக்கி போடு வீர நடையும் 
நேர்  கொண்ட நம் பார்வையும்
இளமையில் ரசித்து வாழ்வது மட்டும்
 இல்லை வாழ்க்கை!,  உன் குறிக்கோள் 
பெரிது என்றால் உன் படிப்பும் உன் உழைப்பும் 
அதை விட பெரிதாக இருப்பது அவசியம் 
உணர்ந்து வளர்த்து கொள் கல்வி அறிவை 
எதற்காகவும் கல்வியை விடாதே 
கல்விக்காக எதையும் விடலாம் ,....
ஒரு ஒரு பெண்ணும் தன்நிகர் 
இல்லாத தங்க மங்கையாய் 
கல்வியில் திகழ்ந்தாள் 
மட்டுமே அந்த முண்டாசு கவிஞனின் 
கோவம் சற்று தணிக்க இயலும் 
போற்றுவோம் பெண் கல்வியை .....
			 
			
			- 
				என் பள்ளி நாட்களே என் சிறந்த நாட்கள் 
கடைசி பெஞ்ச் அரட்டை 
குறும்பு சேட்டைகள்  
வேடிக்கையான சண்டைகள் 
மற்றும் முடிவில்லாத பேச்சுக்கள்  
சிறந்த நண்பர்கள் 
குழந்தைத்தனமான போக்குகள் 
பிறந்தநாள் விருந்துகள் 
இவையே என் வாழ்வின்
 சிறந்த தருணங்கள்.
கொட்டாவி விடும் ஆசிரியர்கள் 
அவர்களின் சலிப்பான விரிவுரைகள் 
வெளியில் நின்ற வகுப்புகள் 
விளையாட்டு நேரங்கள் 
என் பள்ளி நாட்களே 
என் சிறந்த நாட்கள்.
வருத்தமில்லாத அந்த நாட்கள் 
மறக்க கூடியவை அல்ல.
எப்பொழுதும் குழந்தையாக இருப்பதே 
ஒவ்வொருவரின் உள்நோக்கமும் 
அதுவே என்னுடையதும் .
வளைவில்லா ஆற்றை போல 
மயக்கம் இல்ல காற்றை போல
முடிவில்லா பாதையை போன்றன
அந்த நாட்கள்.
நீல வானை இமைக்காமல் 
நோக்கும் தெளிந்த குளத்தை போல 
நான்  என் நட்பின் மதிப்பை 
உணர்ந்த நாட்கள் அவை.
அந்த நாள் நியாபகங்களை  நினைக்கையில்  
நான் பெரியவளாய் வளர்ந்திருக்கவே கூடாது 
என்ற எண்ணத்தோடு 
என் மனதிற்குள்  சிரிக்கிறேன்.
அந்த வேடிக்கையான நினைவுகளே 
என்றும் என் துணை.