FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 02, 2015, 07:27:30 PM

Title: ~ மினி வெஜ் ஊத்தப்பம் ~
Post by: MysteRy on December 02, 2015, 07:27:30 PM
மினி வெஜ் ஊத்தப்பம்

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12219341_451467228378997_8463803788890164964_n.jpg?oh=4f0339c6dcc2c29098da005487ce5654&oe=56E96144)

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 4 கப்,
கேரட் துருவல் - அரை கப்
கோஸ் துருவல் - அரை கப்,
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1,
இட்லி மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வெங்காயம் குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி… கோஸ் துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்து மேலும் வதக்கி(கலர் மாற கூடாது), இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் மாவை குட்டி குட்டி ஊத்தப்பமாக (சற்று தடிமனாக) ஊற்றி, மேலே இட்லி மிளகாய்ப்பொடி தூவி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக எடுக்கவும்.

• சாஸ் உடன் பரிமாறவும்.