FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 29, 2015, 05:30:27 PM

Title: ~ ஆட்டுக்கால் பாயா ~
Post by: MysteRy on November 29, 2015, 05:30:27 PM
ஆட்டுக்கால் பாயா

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/l/t1.0-9/12299337_1514462245517912_9047772627192263965_n.jpg?oh=3829975ce9083c28dbdf2a5a26579d52&oe=56F4A606)

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கால் 2
வெங்காயம் 1
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 2tsp
கரம் மசாலா தூள் 1tsp
மிளகு தூள் 1tsp
சீரக தூள் 1tsp
மல்லி தூள் 3tsp
மஞ்சள் பொடி 1/4tsp
மிளகாய் தூள் 1tsp
எண்ணெய் 2tbsp
கறிவேப்பிலை ,கொத்தமல்லி தழை
பச்சை மிளகாய் 2
தேங்காய் துருவல் 4tbsp
கஜு 8
மைதா 2tbsp
உப்பு

செய்முறை

வெங்காயம் ,தக்காளி கொத்தமல்லி தழை ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும் . தேங்காய் மற்றும் கஜுவை நன்றாக அரைத்து வைக்கவும் . சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதா மா சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும் . ஊற வைத்த ஆட்டுக்காலை கழுவி ப்ரசர் குக்கரில் இட்டு நறுக்கிய வெங்காயம் ,தக்காளி ,மல்லி தூள் வகைகள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் நன்கு படும் அளவு நீர் ஊற்றி அவிய விடவும் .2-3 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். இளங்காளாக இருந்தால் அரை மணி நேரம் சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரம் வைத்து வேக வைக்கவும் .

கால் வெந்து விட்டதை உறுதி செய்து கொண்டு அரைத்த தேங்காய், கஜு விழுதை சேர்க்கவும் . அடுப்பில் வைத்து 1/4 மணி நேரம் கொதிக்க விடவும். தேங்காய் வாடை அடங்கி சால்னா நெலு நெலுப்பாக இருக்கும் .பின் ஒரு கடாயில் எண்ணெய் இட்டு வெங்காயம் ,கறிவேப்பிலை ஆகியவற்றை இளஞ்சிவப்பாக வதக்கி ஆட்டுக்கால் பாயாவில் சேர்க்கவும் . சுவையான சத்தான ஆட்டுக்கால் பாயா தயார் .