FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 28, 2015, 09:17:56 PM
-
தந்தூரி சிக்கன்
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/12295336_1514461022184701_372702387565330680_n.jpg?oh=0b6373158a8b1caba7a9a3be5e75c743&oe=56F1A6CE)
தேவையான பொருட்கள்
கோழி -4 ( தொடை பகுதி )
எண்ணெய் -1/2 l
ஜிலேபி பவுடர்
மைதா மா -50g
கடலை மா -50g
சில்லி சிக்கன் பவுடர் -50g
தேசிக்காய் -1
இஞ்சி பூண்டு விழுது -2tsp
உப்பு
முட்டை -1(வெள்ளை கரு )
செய்முறை
கோழியை நன்கு சுத்தம் செய்த பின்னர் அதன் மீது கத்தியால் கீறாக வெட்டவும் . பின் பாத்திரத்தில் மைதா மா ,கடலை மா சில்லி சிக்கன் பவுடர் இஞ்சி பூண்டு விழுது முட்டையின் வெள்ளை கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும் .
அதன் பின்பு அக் கலவையில் தேசிக்காய் சாறை பிழிந்து அத்துடன் நிறத்துக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து நன்கு கலக்கவும் .பின் அக் கலவையை 1மணி நேரம் ஊற வைக்கவும் . கடாயில் எண்ணெய் ஊற்றி கொதி வரும் வேளையில் அதில் அக் கலவையை வேக வைக்கவும் . பொன் நிறமாக வந்ததும் சுவையுடன் பரிமாறவும் .