FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 24, 2015, 10:30:59 PM

Title: ~ தக்காளி- உருளைக்கிழங்கு கிரேவி ~
Post by: MysteRy on November 24, 2015, 10:30:59 PM
தக்காளி- உருளைக்கிழங்கு கிரேவி

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xlt1/v/t1.0-9/12289627_1513730858924384_2033887670585654810_n.jpg?oh=2a9233a4660cee86558f8f73a4d18913&oe=56E79062&__gda__=1458203718_4f3412986f5773240fcff372158d2107)

தேவையானவை:

உருளைக்கிழங்கு- 2
தக்காளி- 2
சீரகம்- கால் டீஸ்பூன்
சீரகத்தூள், மிளகாய்த்தூள்,தனியாத்தூள், கரம்மசாலாத்தூள்- தலா அரை டீஸ்பூன்
கொத்தமல்லி- சிறிதளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
உப்பு- தே.அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மசாலத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, 3 அல்லது 4 விசில் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.