FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 24, 2015, 08:29:34 PM

Title: ~ வரகரிசி தக்காளி சாதம் ~
Post by: MysteRy on November 24, 2015, 08:29:34 PM
வரகரிசி தக்காளி சாதம்

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12294842_1513692992261504_4020259053149927739_n.jpg?oh=34d2258c552f4cef9acb7843ccd36c45&oe=56EDBF7C)

தேவையான பொருட்கள்:

வரகரிசி - 1/2 கப்,
தக்காளி -2,
வெங்காயம் - 1,
இஞ்சி பூண்டு விழுது -1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு :

கடுகு - 1/4 டீஸ்பூன்,
பட்டை -1,
கிராம்பு - 1
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

• தக்காளியை அதைத்து கொள்ளவும்

• வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

• வரகரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

• குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

• பின்னர், இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

• அத்துடன் தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

• பின்னர், தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வரகரிசி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கினால் சுவையான வரகரிசி தக்காளி சாதம் ரெடி.