FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 24, 2015, 08:00:09 PM

Title: டர்ர்ர், புர்ர்ர் மறையும், கொழுப்பு குறையும் - கொண்டைக் கடலையின் அற்புத நன்மைகள்
Post by: MysteRy on November 24, 2015, 08:00:09 PM
டர்ர்ர், புர்ர்ர் மறையும், கொழுப்பு குறையும் - கொண்டைக் கடலையின் அற்புத நன்மைகள்

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/12295403_1513503912280412_5544183028141940668_n.jpg?oh=d28df6aab64eab7f4660892da43acf2d&oe=56AD0561&__gda__=1458000362_f952ce5edfbcd9a587967eacd995b522)

உடலை சீராக, வலுவான முறையில் வைத்துக்கொள்ள புரதச்சத்து மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. அத்தகைய புரோட்டீன்கள் மீன், பால், காய்கறிகள் போன்ற நிறைய உணவுகளில் உள்ளன. அசைவ உணவு பிரியர்களுக்கு, இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. அதே சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகை உணவுகளில் தான்.

அந்த வகையில் கொண்டைக்கடலை ஓர் சிறந்த உணவுப் பொருளாகும். இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக சப்பாத்தி, பூரி போன்ற உணவிற்கு இது சிறந்த சைடிஷ்ஷாக விளங்குகிறது. ருசி மட்டுமில்லாது, உடல்நலனை வெகுவாக ஊக்குவிக்கிறது கொண்டைக்கடலை....

இதய நலன் உங்களது அன்றாட உணவு முறையில் கொண்டைக்கடலையை சேர்த்து வந்தால் இதயத்தை வலுவாக்க முடியும். இது இதயம் ஆரோக்கியமாக இருக்க பயனளிக்கிறது.

ஊட்டச்சத்துக்கள் கொண்டைக்கடலையில் புரோட்டீன், கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக இருக்கின்றன.

கருப்பை குழாய் பிரச்சனை கருப்பை குழாய் பிரச்சனை இருப்பவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.http://pattivaithiyam.net/ (http://pattivaithiyam.net/)

இரத்த சோகை கொண்டைக்கடலையை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் மற்றுமொரு சிறந்த பயனாக விளங்குவது ரத்த சோகை பிரச்சனை. இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வேகவைத்த கொண்டைக்கடலையை உட்கொண்டு வந்தால் விரைவில் இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வுக் காண இயலும்.

நார்ச்சத்து கொண்டைக்கடலையில் இருக்கும் நார்ச்சத்து வாயுப்பிரச்சனையை சரி செய்து நல்ல தீர்வளிக்கிறது.

கொழுப்பு குறையும் இதில் கொழுப்பு மிகவும் குறைவு. மற்றும் இதில் இருக்கும் ப்ரோடீன், வைட்டமின், கால்சியம் போன்றவை உடல் வலுவை அதிகரிக்கிறது. மேலும், உடலில் அதிகளவு கொழுப்பு சேராமல் இருக்க உதவுகிறது.