நிழல் படம் எண் : 080
இந்த களத்தின்இந்த நிழல் படம் PAUL WALKERஅவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F080.jpg&hash=92990fa29340c57bcd0ad77579d818de04aa0377)
அந்தி மாலை பள்ளி மணியின்
அலறலை கேட்டு
அணை உடைந்த நீரென
பாய்ந்து செல்லும் மழலைகள்...
தாயின் சுண்டு விரல் பற்றிடவே;
பூச்செடி உயரத்தில் ஒரு பூ அவள் !
ஏக்கம் நிறைந்த பார்வையுடன்
நோட்டமிடுகிறாள்
தாய்- சேய் கரங்களின் பிணைப்பை;
இவள் தாயின் ஸ்பரிசம்
அறிந்ததில்லை இப்பூ !
----------------------------------------------------
காலச்சக்கரத்தின் சுழற்சி...
நம் இருவரின் சந்திப்பு;
எழுதி வைத்தார் போல்
காதல் மலர,
இறுக பற்றி கொண்டாய்
என்னிரு சுண்டு விரல்களையும் இணைத்து ...
காதலின் உச்சத்தில்
கண் அணை உடைந்து
கரம் விரித்து, என் தோளில்
உன் முகம் புதைத்து
இறுக்கி அணைக்க ,
உன் நகம் கொண்டு
என் முதுகை பிளந்து
எனை நீங்கி சென்றாய்
அன்று...
பின்னொரு நாளில்;
பனி மழைச்சாரலில்
ஒரு பக்கம் நீ, மறு பக்கம் நம் பிள்ளை
என் சுண்டு விரல் பற்றி
என்னை சுற்றி சுற்றி வட்..
கனவின் விழிப்பில்
நிறைவு பெறாத வட்டம் !
மதிப்பிற்குரிய வெட்டியாரே
ஒரு விண்ணப்பம்;
என்னை புதைத்தாலும்
என் கரத்தை மூடிவிடாதீர் !
சுண்டு விரல் தேடி வரும் ஒரு பூ !