FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 18, 2015, 07:16:59 PM
-
வெந்தயம் தரும் ஆரோக்கியம்!
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/12208759_452687314932528_8678839128981182060_n.jpg?oh=ddf4e66294ddc239039d14e2473bb630&oe=56F3D330&__gda__=1458857067_0f823255fcd01b346535983d6967aa0f)
நமது தமிழ்நாட்டு சமையலில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு பொருள் ‘வெந்தயம்’. வெந்தயத்தால் விளையும் அற்புத நன்மைகள் என்னென்ன என்பதை தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்!
*இந்த வெந்தயம் இருக்கே… இது சாதாரண வாசனைப் பொருள் இல்ல! இது நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அற்புத உணவுப்பொருள். பொதுவா இந்த வெந்தயம் பித்தத்தை போக்குறதுல சிறப்பான பலன் தருது. வெந்தயத்த பொடி செஞ்சு நீரில் ஊற வெச்சு (3 மணிநேரம்), அந்த நீரை குடிச்சு வந்தா வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், உடற்சூடு, வயிற்றுப்போக்கு தீரும்! வெந்தையத்த வறுத்து அதுகூட சம அளவுக்கு கோதுமை சேர்த்து பொடி செஞ்சு நீரில் கலந்து காப்பிக்கு பதிலாக குடித்து வரலாம். அப்படி செஞ்சா, உடல் வெப்பம் நீங்கும்! வெந்தயத்த அரைச்சு தலையில தேய்ச்சு குளிச்சு வந்தா முடி உதிர்வது நின்னிடும். முடி நல்லா வளரும்!”
*வெந்தயத்துல மட்டுமில்ல, வெந்தயக் கீரையிலையும் நிறைய நன்மைகள் இருக்கு. வெந்தயக் கீரையை வேகவைத்து எண்ணெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டா பித்த மயக்கம் தீரும். வெந்தயக்கீரையை தோசையோடு சேத்து சாப்பிடலாம். அப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தா உடல் வன்மையாகும்; உடல் வலியும் தீரும்.
*வெந்தயக்கீரையை கருணைக்கிழங்கோட சேத்து சமைச்சு சாப்பிட்டு வந்தா உடல் எடை கூடும்!
* வெந்தயக் கீரையை அரைத்து, பின் நன்கு கிளறியெடுத்து உடல் வீக்கங்களின் மேல் கட்டிவைத்தால் நல்ல பலன் கிடைக்கும்; தீப்புண்களும் இதனால் சரியாகும்.
* வெந்தயக்கீரையுடன் சீமை அத்திப்பழம் சேர்த்து அரைத்து உடலில் ஏற்படும் கட்டிகள் மீது பற்றிட்டால் கட்டிகள் உடைந்து குணமாகும்; படைகள் மீது பூசினால் குணமாகும்.
* வெந்தயத்தை 17கிராம் எடுத்து (2 ஸ்பூன் அளவு) அதனுடன் 340மி.கிராம் பச்சரிசி (ஒரு டீஸ்பூன் அளவு) சேர்த்து சமைத்து உண்டு வந்தால், இரத்த உற்பத்தி பெருகும்.
* கஞ்சி காய்ச்சும்போது அதனுடன் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி குடித்தால் குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்கும்.
* வெந்தயம், மஞ்சள் தூள், கடுகு, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு நெய்விட்டு வறுத்து, பின் பொடிசெய்து உணவுடன் கலந்துண்டு வந்தால் வயிற்று வலி, பொருமல், வலப்பாட்டீரல்- இடப்பாட்டீரல் வீக்கங்கள் (hepatomegaly- splenomegaly) ஆகியவை படிப்படியாகக் குறையும்.