FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: Global Angel on January 02, 2012, 04:29:06 AM

Title: டின் மீன் கறி
Post by: Global Angel on January 02, 2012, 04:29:06 AM
டின் மீன் கறி  


தேவையானவை:

டின் மீன் 1
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 3
தக்காளி 2
உள்ளி/வெள்ளை பூண்டு 4
கறிவேப்பிலை 15 இலைகள்


மிளகாய் தூள் 2 மே.க
மல்லி தூள் 1 மே.க
மஞ்சள் தூள் 1/2 தே.க
சின்ன சீரகம் 1/2 தே.க
கடுகு 1/2 தே.க
எண்ணெய் சிறிதளவு
நீர் 1 கோப்பை
உப்பு தேவையான அளவு

செய்முறை:

1. முதல்ல டின் மீனை வலை போட்டு ஒரு கடையில இருந்து பிடிச்சிட்டு வரணும்.

2. வெங்காயத்தை தோலுரிச்சு, நீளமாக வெட்டி எடுக்கணும். அதோட மிளகாயையும் நான்காக நீளவாக்கில் வெட்டி எடுக்கணும்.

3. இப்போ மீதி இருக்கிற தக்காளியை வெட்டணும்னு நான் சொல்லுவேன்னு எதிர்பாக்கிறிங்களா? அப்படின்னா நீங்க இன்னமும் சமையலில் ஒரு அப்பிராணி, இல்லைன்னா நீங்க சமையல்ல ஒரு புலி.[கவனம்:வலையில் புலி எதிர்ப்பாளர்கள் அதிகம்]

- தக்காளியை சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளுங்கள்.

4. உள்ளியை தோல் உரித்து, விழுதாக அரைத்து எடுங்க. இதோட ஆயத்த வேலைகள் முடிந்தது. இனி:

5. அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு சட்டியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்குங்க.

6. கடுகை முதலில் போட்டு வெடிக்க விடவும். பின்னர் முறையே சீரகம்,அரைத்த உள்ளி, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு நன்றாக வதக்குங்க. நன்றாக வதங்கி வரும் போது சட்டியில் இருக்கும் கலவை அரைத்த விழுது போல வந்திருக்கும்.

7. இந்த கலவையோடு முதலில் மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடத்திற்கு அவிய விடுங்க.
பின்னர் தூள்களையும் உப்பையும் நீரையும் சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்க.


அப்புறம் என்ன? அம்புட்டு தான். கறிய 4 பேருக்கு சாப்பிட குடுத்தமா, அவங்கள கொன்னமா என இருங்க. நாம சமையல் பழகனும்னா 4 பேர போட்டு தள்ளின குற்றம் இல்லையாக்கும்.கிகிகிகிகி