FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: Global Angel on January 02, 2012, 04:17:21 AM
-
வெண்டிக்காய் பால்கறி
கறிவேப்பிலை 10 இலைகள்
வெந்தயம் 1 தே.க
பெரும் சீரகம் 1/2 தே.க
மஞ்சள் தூள் 1/2 தே.க
தேங்காய் பால் 1 மே.க
உப்பு - உங்க இஸ்டம்
செய்முறை:
1. வெண்டிக்காயை சுத்தம் செய்து, சிறிய வட்டங்களாக வெட்டிக் கொள்(ல்)ளுங்கள். நீளமா வெட்டினா கூட தப்பில்லை.அது உங்க இஸ்டம்.
2. தக்காளியை சிறிய துண்டுகளாக அறுத்து கொள்ளுங்கள். அது போல வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்த்து எடுங்கள்.
3. ஒரு பாத்திரத்தில் மேற் கூறிய பொருட்களில் பாலை தவிர அனைத்தையும் ஒரு சட்டியில் போடுங்கள். அதில் 1/4 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.(மறக்காமல் தீ உள்ள அடுப்பில் வையுங்க மக்கா..அப்புறம் இங்கண வந்து கேள்வி கேட்காதிங்க)
4. வெண்டிக்காய் விரைவில் அவிந்துவிடும். பாதி அவிந்ததும், அதில் பாலை சேர்த்து கிளறி 2 நிமிடத்தில் அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். அதிகம் அவிந்தால் உண்பதற்கு சுவையாக இருக்காது.
மிகவும் சுலபமான, சுவையான, உடல்நலத்திற்கு நல்ல உணவு ஆயத்தம்! நல்லா சாப்பிட்டு நல்லா வாழுங்கப்பா...
பி.கு: இந்த சைவ செய்முறையை அசைவமாக மாற்ற மிகவும் சுலபமான வழி உள்ளது. இறால் கருவாடு அல்லது மீன் கருவாட்டு துண்டுகளை சேருங்கள். சுவை ஆளை தூக்கும். (இல்லைன்னாலும் சமையல் தூக்கிடும்ல) கிகிகிகி