FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 14, 2015, 07:53:11 PM
-
சிக்கன் மஞ்சூரியன்
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12247062_1511258342504969_5437858769202838197_n.jpg?oh=e82aade28e02bca518c403b82f4dd0d4&oe=56BB0B05)
சிக்கன் 1/2 கிலோ
கேப்சிகம் 1
பெரிய வெங்காயம் 1
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 5 பற்கள்
ஸ்பிரிங் ஆனியன் சிறிதளவு
சோயா சாஸ் 2 டீஸ்பூன்
ஹாட் சில்லி சாஸ் 5 டீ ஸ்பூன்
டொமேட்டோ சாஸ்2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கார்ன் ப்ளார் 4 டீ ஸ்பூன்
ஆயில் தேவையான அளவு
மல்லி இலை சிறிதளவு
முதலில் சிக்கனை கழுவி அதில் உப்பு ,2 ஸ்பூன் கார்ன் ப்ளார்,
சில்லி சாஸ் 2 ஸ்பூன்,ஊற்றி பிரட்டி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு நாண் ஸ்டிக் பாணில் எண்ணெய் ஊற்றி 5 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும்.
பிறகு வெங்காயம் ,இஞ்சி ,பூண்டு,கேப்சிகம்,ஸ்பிரிங்
ஆனியன்,அனைத்தையும் பொடியாக நறுக்கி எண்ணெயில்
3 நிமிடங்கள் வதக்கவும்.பிறகு பொரித்த சிக்கனை அதில் சேர்க்கவும்.
மீதி உள்ள சாஸ் அனைத்தயும் சிக்கனில் சேர்த்து கால் டம்ளர் தண்ணீரில்
2 ஸ்பூன் கார்ன் ப்ளார் கரைத்து ஊற்றி 2 நிமிடம் வைத்து உப்பு சரி பார்த்து இறக்கி மல்லி இலை தூவி பறிமாறவும்.