FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: Global Angel on January 02, 2012, 04:00:34 AM
-
ஆத்து கெழுத்தி குழம்பு
ஆற்றுக்கெழுத்தி மீன் : அரை கிலோ
சின்ன வெங்காயம் : 25 பாதியாக அரிந்தது
தக்காளி : 2
பூண்டு : 5 பெரிய பல்
புளி : 2 எலுமிச்சை அளவு
மல்லித் தூள் : 3 மேசைகரண்டி
மிளகாய் தூள் : 2 மேசைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
இதுக்குல்லாம் முன்னாடி தாளிக்கிற அயிட்டத்தை எடுத்துக்குவோம்
சோம்பு : 1/2 கரண்டி
வெந்தயம் : 1/2 கரண்டி
கறிவேப்பிலை : வேணுங்கிற தக்கன ( ஹிஹி லோக்கல் ஸ்லாங்)
நல்ல எண்ணெய் : கொஞ்சமா :P
முதல்ல ஒரு பாத்திரத்துல ( மண்சட்டியாய் இருந்தா சூப்பரப்பு ) புளியை நல்லா கரச்சு அதில உப்பு மல்லித்தூளு மொளகாய்த்தூளு போட்டு மறுபடியும் மெகாத்தொடர் விளம்பர இடைவேளை வர வரைக்கும் நன்னா கரச்சு தக்காளியையும் போட்டு சமீபமா யாரௌ மேல கோபமோ அவங்களை நினைச்சு நல்லா பிழிஞ்சு கரச்சுக்குங்க
கரைச்சாச்சா.... ஒகே அடுத்துதான் முக்கியமான வேலை
ஒரு பான்(Pan) இல்லைனா தாளிக்கிற கரண்டில எண்ணெய்யை விட்டு வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை எல்லாத்தையும் போட்டு தாளிக்கவும். பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், இரண்டையும் சட்டில போட்டு நல்லா நிறமாக வதக்கவும். வதக்கியாச்சா ஒகே இப்போ மீனை புளிகரைசலில் போட்டு சட்டியை பத்த வைக்கவும் மொத 2 நிமிசத்துக்கு ஹை பிளேம்ல இருக்கட்டும் அப்படியே தாளிச்சதை அப்படியே கொட்டி லேசா சூடாகுற நேரத்துல வயிறு மட்டும் சுத்தம் பண்ணி வச்சுறுக்கிற கெழுத்தியை எடுத்து போடுங்க. ஒகே இப்போ நல்ல பிள்ளையா அடுப்பை சிம்'ல வச்சுட்டு மீதி சீரியல் பார்க்க துவங்கின 10 வது நிமிசம் ஆளை மயக்குற வாசனை வரும் . அருமையான கெழுத்தி மீன் குழம்பு செஞ்சாச்சு. சாப்பிட்டு சொல்லுங்க .
குறிப்பு :ஆற்றுக் கெழுத்தி கிடைக்கலைனா விறால் வாங்கியும் இதே செய்முறைல செய்யலாம். கெழுத்தி மீன்னா என்னான்னு கேக்குற மக்களு ஒரு சின்ன நினைவுபடுத்தல் "முதல் மரியாதை" படத்துல ராதாட்ட வாங்கி நடிக திலகம் சிவாஜி சாப்பிடுவாறுல அதே தான் கெழுத்தி மீன்
-
Kezhuththi meen my fav. Intha sei muraiya ketale vaai ooruthu hehe. I mis kezhuthi meen :|