FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 13, 2015, 12:31:54 PM
-
பட்டாணி சாதம்
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/12243214_1511013519196118_1427173031972769633_n.jpg?oh=fcadab2a31b115fdcbb4892bda383d62&oe=56BB3755)
தேவையானப் பொருட்கள்
அரிசி – 2 கப்
பட்டாணி – 1 கப்
கேரட் – 1
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 10
நெய் – 100 கிராம்
பட்டை – 2
கிராம்பு – 4
சோம்பு – 1/2 ஸ்பூன்
கசகசா – 1/2 ஸ்பூன்
பிரிஞ்சி இலை – ஒன்று
ஏலக்காய் – 3
இஞ்சி – சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு – 100 கிராம்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 11/2 ஸ்பூன்
கடுகு – தாளிக்க
உப்பு – தேவையான அளவு
எண்ணைய் – தேவையான அளவு
மல்லி இலை,கறிவேப்பிலை – சிறிது
green-peas-rice1
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா ஆகியவற்றை சிறிது தண்ணிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து நெய்யையும், எண்ணெயையும் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பிரியாணி இலை, ஏலக்காய், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பின் பட்டாணி, கேரட், சேர்த்து நன்கு வதக்கி.
அதனுடன் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு போட்டு நன்கு வதக்கிய பின்பு அரிசியையும் சேர்த்து ஒரு கிளறு கிளறிய பிறகு இரண்டு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் மேலாக சிறிது நெய் விட்டு குக்கரை மூடி 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
சிறிது நேரம் கழித்து இறக்கி அரிசி உடையாமல் நன்கு கிளறி மல்லி இலை தூவி சூடாக பறிமாறவும்.