பண்டிகை காலம் வந்துவிட்டாலே ஊழியர்கள் அனைவரின் எண்ணத்தில் முதலில் தோன்றுவது போனஸ் தான்.
இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸை வழங்கி வருகின்றன.
சரி இந்த போனஸ் முறை எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வரை வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது 4 வாரங்களுக்கு ஒருமுறை சம்பளம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது.
அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது.
ஆனால் ஒரு வருடத்திற்கு 52 வாரங்கள் வருகிறது. அப்படியென்றால் 13 மாத சம்பளங்கள் வர வேண்டுமல்லவா? இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக 1930-ம் ஆண்டு வாக்கில் மகாராஷ்ட்ராவில் உள்ள சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடங்கின.
தங்களுக்கு ஒரு மாத சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடின.
10 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பிரிட்டிஷ் அரசு ஆலோசனை நடத்தியது.
இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு அதிக பணத் தேவை இருக்கும் என்றும், அந்த சமயத்தில் போனஸ் வழங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து 1940-ம் வருடன் ஜுன் மாதம் 30-ம் திகதி இந்தியாவில் முதன் முதலாக இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது.
Title: Re: ~ போனஸ் பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா? ~
Post by: Nick Siva on November 08, 2015, 10:36:16 PM
Itha padikum pothum ennoda ennathula enaku yeppo dhaan ivanga muzhusa bonus tharuvanga nu dhaan thonuthu. One year job la nalla velai vanghikuranga ana bonus time la kodukkum pothu kodukura avangakulum thirupthi illa vangura enakum muzhu thirupthi illa karanam muzhusa avanga koduthu la .....
Title: Re: ~ போனஸ் பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா? ~
Post by: MysteRy on November 09, 2015, 08:44:40 AM