FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 08, 2015, 09:31:20 PM

Title: ~ உணவே மருந்தாகும் கீரை வகைகள் ~
Post by: MysteRy on November 08, 2015, 09:31:20 PM
உணவே மருந்தாகும் கீரை வகைகள்

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/11202091_1509441406019996_8168591718419037651_n.jpg?oh=ed2c771a47424a68b8ac8d23149b8eca&oe=56F5055C)

கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது, எல்லாவித கீரையிலும் உடலுக்கு நன்மை பயக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது.
சிறுகீரை
சிறுகீரையைப் பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத்தும், உஷ்ணவீர்யமும் உடையது.
குடல், இருதயம், மூளை, ரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் போகும்.
விஷ மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுகீரையை வெறும் மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் பாஷானத்தின் வீறு தணிந்து அதனால் வந்த வியாதியும் குணமடையும்.
முளைக்கீரை
முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக்கண் பார்வை குறைவு நீங்கும்.
அஜீரணக்கோளாறு,வயிற்றுப்புண் சரியாகும். வாரத்திற்கு இருமுறையாவது முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், நீரடைப்பு குணமாகும்.
மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோயுடையவர்கள் தினசரி சாதத்துடன் முளைக்கீரையை சாப்பிட்டு வந்தால் அவை குணமடையும், உடலுக்கும் நல்லது.சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தினசரி முளைக்கீரை கொடுத்துவர உடல் வலிமையுடன் வளரும்.
இந்தக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் ஏ, பி உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகிறது.
உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு எந்த மாத்திரையோ, டானிக்கோ கொடுக்காமல் முளைக்கீரையை மட்டும் கொடுத்துவர அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

அரைக்கீரை
இதை சாப்பிட்டுவர பித்தம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.
அதிக அளவில் சிறுநீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி இயற்கை அளவுடன் இறங்கச் செய்யும். இரத்த பிரமேகம் என்னும் வியாதியைக் குணப்படுத்தும்.
மிளகு தக்காளி கீரை
உடலில் வீக்கம் இருந்தால் அதை வாடச்செய்யும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும், சொறி , சிரங்குகளைக் குணப்படுத்தும்.
தேகத்தில் உள்ள புண்களை ஆற்றும். அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் தொடர்புடைய எந்த வியாதிகளும் வராது.
முருங்கைக்கீரை
இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை அதிகரிப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்குவது.
வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும்.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
சிறுநீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நித்தமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.

வெந்தயக்கீரை
முருங்கை கீரையை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது